பிரீமியம் ஸ்டோரி

தோழிகளே... இணையத்தில் ஒரு கதை படித்தேன்.

தவளைகள் சேர்ந்து தங்களுக்குள் ஒரு பந்தயத்தை நடத்தின. உயரமான கோபுரத்தை முதலில் தொடுபவர் வெற்றியாளர் என்பதுதான் போட்டி. கூட்டமாக வேடிக்கை பார்க்க வந்த தவளைகள் பலவும், ''இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தக் கோபுரத்தை அடைய முடியாது'’ என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தன.

நமக்குள்ளே...

''ம்ஹூம்... முடியல'’ என்றபடி போட்டியிலிருந்த தவளைகள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பித்தன. ''ஒருத்தர்கூட அந்தக் கோபுர உச்சியைத் தொடப்போறதில்லை’' என மீண்டும் கத்திக்கொண்டேயிருந்தன கூட்டத்திலிருந்த தவளைகள். இதையெல்லாம் கேட்டுக் கேட்டு மேலும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக்கொண்டன மற்ற தவளைகள். ஒரேயொரு சிறு தவளை மட்டும் முயற்சியைக் கைவிடவே இல்லை. சில விநாடிகளில் உச்சியைத் தொட்டு, வெற்றியும் கண்டது.

'இந்த சிறிய தவளையால் மட்டும் எப்படி சாதிக்க முடிந்தது?' என்று அனைத்தும் வியப்பில் ஆழ்ந்தபோதுதான் தெரிந்தது... அந்தத் தவளைக்குக் காது கேட்காது எனும் விஷயம்!

இந்தக் குட்டிக் கதையை 'லைக்' செய்ததுமே...

'ஓ... அப்படியா? அதாவது, நாம எடுத்துக்கிற முயற்சியில ஜெயிக்கணும்னா... நாம காது கேக்காத ஆளா இருக்கணும். அவ்வளவுதானே' என்று 'காமெடி கமென்ட்' போட்டுவிடாதீர்கள்.

எடுத்துக்கொண்ட முயற்சியில் வெற்றிபெறாமல் போவதற்கு காரணங்கள் நிறைய இருந்தாலும், 'ஊர் என்ன சொல்லுமோ...?', 'அவங்க அவமானமா பாப்பாங்களோ!' என்பது போன்ற தேவையற்ற பயங்களே முக்கிய காரணங்களாக இருக்கின்றன. முயற்சியில் மட்டுமே கவனத்தை வைத்தால், வெற்றி நிச்சயம் என்பதை 'சுருக்'கென்று தைத்துச் சொல்கிறது கதை!

ஆனால், இங்கே அதிகம் இருப்பது... விலகி ஓடும் தவளைகள்தானே தோழிகளே! 'உப்பு விக்க போனேன்... மழை வந்துடுச்சு; 'மாவு விக்கப் போனேன் காத்து வந்துடுச்சு' என்று ரெடிமேடாக இருக்கும் சப்பைக் காரணங்களைச் சொல்லி முடங்கிக் கிடப்போரை நாம் அதிகமாக சந்திக்கத்தானே செய்கிறோம்..!

தேவை... காதில்லாத தவளைகள். என்ன, சரிதானே தோழிகளே!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு