ஹலோ வாசகர்களே..!

பிரபல விமான நிறுவனத்தின் அதிபரான விஜய் மல்லையா தனது ஊழியர்கள் மற்றும் பலரிடம் வரிப் பிடித்தம் செய்த பணம் 400 கோடி ரூபாயை வருமான வரித் துறையிடம் கட்டாமல்விட்டது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானதோடு, இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமலிருக்க, பெயிலும் வாங்கியிருக்கிறார்.

சில தனிநபர்கள் அரசாங்கத்துக்கு கட்டவேண்டிய வரியைக் கட்டாமல் ஏமாற்றுவதுபோல, சில தனியார் நிறுவனங்களும் தனது நிறுவனத்துக்காக கட்டவேண்டிய வரியைக் கட்டாமல் விடுவதோடு, தனது ஊழியர் களிடமிருந்து பிடித்த வரியையும் கட்டாமலே விட்டுவிடுகிறது. ஒவ்வொரு ஊழியர்களுக்கும் அளிக்க வேண்டிய ஃபார்ம் 16-ஐயும் தரமறுக்கிறது.

இதுமாதிரியான நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது, மீண்டுமொருமுறை வரியைக் கட்டவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஊழியர்கள் தாங்கள் வேலை பார்த்த நிறுவனத்திலேயே ஏற்கெனவே வரி கட்டியிருக்க, மீண்டும் ஒருமுறை வரி கட்டவேண்டிய நிலைக்கு அவர்களைத் தள்ளுவது எந்த வகையில் நியாயம்? இந்த ஊழியர்களின் சம்பளம் ஏற்கெனவே குறைவாக இருக்கும்பட்சத்தில், இரண்டாவது முறை வரி கட்ட அவர்கள் பணத்துக்கு எங்கே போவார்கள்? தவிர, அலுவலகத்தில் கட்டிய வரிப் பணம் திரும்பக் கிடைக்குமா என்பதும் சந்தேகமே!

இந்த நிலையில் அரசாங்கமானது கருணை கூர்ந்து செய்ய வேண்டிய விஷயம் ஒன்றுதான். வரி கட்டாத நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மீண்டுமொருமுறை வரி கட்டிவிட்டு, வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதைவிட, வேண்டுமென்றே வரி கட்டாமல் விட்ட நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு வருமான வரித் துறையானது சில விஷயங்களைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் எல்லா நிறுவனங்களும் வரி கட்டியாக வேண்டும். எல்லா நிறுவனங்களும் இதை சரியாகச் செய்திருக்கிறதா என்பதை ஏப்ரல் மாதத்திலேயே கண்டறிந்து, மே மாத இறுதிக்குள் ஊழியர்களின் பணத்தை வருமான வரித் துறையிடம் கட்ட உத்தரவிட வேண்டும்.

அப்படியும் கட்டாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஜூலை 31-க்குள் எல்லா நிறுவனங்களையும் வரி கட்டச் செய்வதுடன், ஏற்கெனவே ஒழுங்காக வரி கட்டிய அப்பாவி ஊழியர்களையும் காப்பாற்ற முடியும். மக்களின் நலனுக்காக இருக்கும் இந்த அரசாங்கம், கம்பெனிகளிடம் கறார் காட்டிவிட்டு, ஊழியர்களிடம் கொஞ்சம் கருணை காட்டலாமே!

-ஆசிரியர்.