Published:Updated:

தொடரும் கிங்ஃபிஷர் ஏமாற்றுகள் !

தொடரும் கிங்ஃபிஷர் ஏமாற்றுகள் !

தொடரும் கிங்ஃபிஷர் ஏமாற்றுகள் !

தொடரும் கிங்ஃபிஷர் ஏமாற்றுகள் !

Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

தொடரும் கிங்ஃபிஷர் ஏமாற்றுகள் !

பூஷண் ஸ்டீல் நிறுவனத்துக்கு கடன் வரம்பை அதிகரிப்பதற்காக  50 லட்சம் ரூபாயை லஞ்சம் பெற்றதாக சிண்டிகேட் வங்கியின் சிஎம்டி   சி.கே.ஜெயின், சிபிஐயினால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பங்கு விலை 55% சரிந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிறுவனம் பல்வேறு வங்கிகளுக்கு ஏறக்குறைய ரூ.40,000 கோடி கடனைத் திரும்பத் தரவேண்டி இருக்கிறது. இந்தப் பணத்தை வங்கிகள் எப்படி திரும்பப் பெறப்போகிறது என்பது மிகப் பெரிய கேள்வி. கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு பல்வேறு வங்கிகளும் சேர்ந்து தந்த கடன் ரூ.4,022 கோடி திரும்ப வராது என்கிற நிலையில், இப்போது இன்னொரு ரூ.40,000 கோடி சேர்ந்திருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் வங்கிகள் திவாலாகும் நிலை உருவாகும். இதேபோன்ற தவறுகளை செய்த நான்கு பொதுத்துறை வங்கிகள் சிபிஐயின் கழுகுக் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.

வங்கிகளின் உயர்பதவிகளில் இருப்பவர்கள் நேர்மை தவறி நடப்பதே இதுபோன்ற தவறுகளுக்கு முக்கிய காரணம். தொழிலதிபர்கள் வங்கி உயரதிகாரிகளிடம் நிஜத்தைச் சொல்லி கடனைக் கேட்ட காலம் போய், பரிசு என்கிற போர்வையில் வங்கி உயரதிகாரிகளுக்கு வைரக் கம்மல்களையும் வீடுகளையும் வாங்கித் தந்து, தங்களின் காரியத்தை சாதுரியமாக நிறைவேற்றிக்கொள்ளும் நிலை உருவாகிவிட்டது.

தொழில் நிறுவனங்களுக்கு கடன் பெற்றுத் தருவதற்கென்றே சில புரோக்கர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் 2 சதவிகித பணத்தைத் தந்துவிட்டால் போதும், வங்கிகளிடமிருந்து எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் கடன் பெற்றுவிடலாம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

தொடரும் கிங்ஃபிஷர் ஏமாற்றுகள் !

இதில் அரசியல்வாதிகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், அதிகாரி களை மிரட்டியே தங்கள் காரியத்தை சாதித்துவிடு கிறார்கள். பிரச்னை வரும்போது அதிகாரிகளை மாட்டிவிட்டு, அவர்கள் தப்பித்துவிடுகிறார்கள். என்றாலும், வங்கி உயரதிகாரிகள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழித்து விட முடியாது. ஒரு லட்சம் ரூபாய் கல்விக் கடன் கேட்டு வரும் கல்லூரி மாணவரிடம் ஆயிரம் கேள்வி கேட்டு அலைக்கழிக்கும்  வங்கி அதிகாரிகள், பெரிய நிறுவனங்களுக்கு கடன் தர எவ்வளவு ஆராய்ந்திருக்க வேண்டும்?

இதுபோன்ற தவறுகள் இனியும் நடக்காமல் இருக்க மோடி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், பொதுத்துறை வங்கிகளின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அடியோடு இழக்க
வேண்டியிருக்கும்.        
                                         
- ஆசிரியர்.