Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:

நீண்ட நாட்களுக்குப் பிறகு, தோழியின் வீட்டுக்குப் போயிருந்தேன்.

'வெச்ச வெச்ச மோதிரம்... யாரு வெச்ச மோதிரம்’ என்று அம்மாவும் பெண்ணுமாக விளையாடிக்கொண்டிருக்க, பார்க்கவே அழகாக இருந்தது அந்த வீடு. குழந்தைகளோடு, பெற்றோர் விளையாடுவதென்பது அபூர்வமாகிவிட்ட காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது அந்தக் காட்சி.

'எப்போது 2 வயது நிறைவடையும்?' என்று காத்திருந்து, முதல் வேலையாக குழந்தையை, 'ப்ளே ஸ்கூலில்’ கொண்டு போய்ச் சேர்த்துக்கொண்டிருக்கும் பல அம்மாக்களுக்கு மத்தியில், 12 வயது மகளுடன் விளையாடிக்கொண்டிருந்த தோழி, வித்தியாசமாகவே தெரிந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேநீருடன் பேச்சு துவங்கியபோது...

நமக்குள்ளே...

''கிரிக்கெட், ஸ்விம்மிங், ஸ்கேட்டிங், பேட்மின்டன்னு ஆசைக்குத் தகுந்த மாதிரி ஒவ்வொரு பெற்றோரும், குழந்தைகளை ஏதாவது ஒரு விளையாட்டுப் பயிற்சிக்கு, பெரும்பணம் செலவழிச்சு அனுப்புறாங்க. உண்மையில, யாருமே குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுறதே இல்லை. மிஞ்சிப் போனா சிலர் கேரம் போர்டு, செஸ் ஆடுகிறார்கள். ஆனால், குழந்தைகளோட பேசி, சிரிச்சு, ஓடி விளையாடுற விளையாட்டை எத்தனை பெற்றோர்கள் ஆடுகிறார்கள்?

நம் பாட்டிகள்... தினமும் நமக்குக் கதை சொல்லிக்கொண்டே, பல்லாங்குழி ஆடியிருக்கிறார்கள்; நம் அம்மாக்கள்... ஆடு புலி ஆட்டம் ஆடியிருக்கிறார்கள்; அப்பாக்கள், எத்தனை விடுகதைகள் போட்டு ஊஞ்சல் ஆட்டுவார்கள்? ஆனால், இந்தத் தலைமுறை பிள்ளைகள், விளையாடுவதற்குக்கூட ப்ளே ஸ்கூலுக்குப் போக வேண்டியிருப்பது எத்தனை கொடுமை! குடும்பப் பாரம்பரியம், அம்மாவின் பாசம் ஒட்டாத விளையாட்டுகள்தான் இப்போது கிடைக்கின்றன. பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளி அதிகமாவதற்கு இதுவும் ஒரு காரணம்'' என்று தோழி சொன்னபோது, 'உண்மைதான்’ என்று என் உதடுகள் தானாகவே உச்சரித்தன.

யாராக இருந்தாலும் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு வயது வரைதான் குழந்தையைத் தூக்கி விளையாட முடியும். ஐந்து வயது வரைதான் கிச்சுகிச்சு மூட்டி விளையாட முடியும். பத்து வயதுவரைதான் ஓடிப்பிடித்து விளையாட முடியும். பதினைந்து வரைதான் பேட்மின்டன், ஷட்டில்காக் விளையாட முடியும். இதெல்லாம் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத இன்பங்கள்! உணர்ந்துகொண்டாலே போதும், ஒவ்வொன்றும் தானாகவே சரியாகிவிடும்.

உண்மைதானே தோழிகளே..!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism