Published:Updated:

மின்மிகை நாடாக மாற்றுங்கள்!

மின்மிகை நாடாக மாற்றுங்கள்!

மின்மிகை நாடாக மாற்றுங்கள்!

மோடியின் 100 நாள் ஆட்சி பற்றி எல்லோரும் பாராட்டிப் பேசிவரும் இந்தச் சமயத்தில், யாரும் கவனிக்காத ஒரு பெரும் பிரச்னை அணுகுண்டாக வெடிக்கத் தயாராக இருக்கிறது. இந்தியா முழுக்க உள்ள 100 அனல் மின் நிலையங்களில் ஏறக்குறைய 56 மின் நிலையங்களில் அடுத்த ஒருவார காலத்துக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பில் இருக்கிறது. அடுத்த ஏழு நாட்களுக்குள் இந்த மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி கிடைக்கவில்லை எனில், மின் உற்பத்தி கணிசமாகக் குறைந்து, நாடே இருளில் மூழ்க வேண்டிய அபாயம் ஏற்படும்.

கடந்த ஆண்டைவிட அதிக அளவில் மின் உற்பத்தி செய்த இந்த அனல் மின் நிலையங்கள், தொடர்ந்து மின் உற்பத்தி செய்யத் தேவையான நிலக்கரியை இருப்பில் வைக்கத் தவறிவிட்டன. மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை கோல் இந்தியா நிறுவனம் தரமறுப்பதால் இந்த நிலைமை உருவாகி இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். மின் உற்பத்தித் துறை ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் சிக்கலில் மாட்டித் தவிக்கிறது.
மேலும், உச்ச நீதிமன்றம் 1993-2010ம் ஆண்டு  வரை தந்த நிலக்கரி சுரங்கங்களுக்கான அனுமதியை சமீபத்தில் ரத்து செய்ததால், இந்தத் துறையில் தேக்கநிலை உருவாகி உள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்படி பல காரணங்கள் சொல்லப் பட்டாலும், மத்திய அரசு இந்தப் பிரச்னை யில் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு, மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை ஏற்பாடு செய்துதர வேண்டும். இதற்கு மத்திய அரசாங்கம் சில உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்தியா முழுக்க நிலத்துக்கடியில் குவிந்து கிடக்கும் நிலக்கரியை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதபடி வெளியில் எடுக்க வேண்டும். எல்லா அனல் மின் நிலையங்களிலும் குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பில் இருக்கிறமாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். மின் உற்பத்தி நிறுவனங்களில் கடன் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

மின்மிகை நாடாக மாற்றுங்கள்!

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் அவசியம் தேவை என்பதை நன்கு உணர்ந்தவர் பிரதமர் மோடி. அதனால்தான் குஜராத் மாநிலத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி சாதனை புரிந்தார். இதேபோல் இந்தியாவை மின்மிகை நாடாக மாற்றினால்தான் மோடி நினைக்கும் ஒளி மிகுந்த இந்தியாவை உருவாக்க முடியும்.    

- ஆசிரியர்.