பல சமயங்களில் நாம் செய்யும் தவறுகள் நமக்கே தெரிவதில்லை. நமக்குப் பக்கத்தில் இருந்துகொண்டு நம்மை உற்றுக் கவனிப்பவர்கள், அந்தத் தவறுகளை சுட்டிக் காட்டும்போதுதான் தெரிகிறது. அதுமாதிரி, மத்திய அரசாங்கம் செய்யும் இரண்டு தவறுகளை சரியாகவே சுட்டிக் காட்டியிருக்கிறார் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன்.

அதில் முதலாவது, வெளிநாடுகளில் இருந்துவரும் அந்நிய நேரடி முதலீட்டை நாம் அதிகம் நம்பி இருப்பது. அந்நிய நேரடி முதலீட்டுக்கான கடன் வரம்பை 5 பில்லியனில் இருந்து 25 பில்லியனாக சமீபத்தில் உயர்த்தியது ஆர்பிஐ. இந்த உச்சவரம்பை குறுகிய காலத்திலேயே எட்டுகிற அளவுக்கு முதலீடு செய்தனர் எஃப்ஐஐகள். இந்த பணத்தை நாம் கவனமாக கையாள வேண்டும். காரணம், லாபத்தை எதிர்பார்த்து எளிதாக வரும் இந்தப் பணம், எளிதாகவே திரும்ப சென்றுவிடும். அப்படிப் போகும்போது நாம் திக்குமுக்காடி நிற்கக் கூடாது என்று அவர் சரியாகவே எச்சரித்திருக்கிறார்.

இரண்டாவது, பொதுத் துறை வங்கிகளை மத்திய அரசாங்கம் தனது நோக்கத்துக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள நினைப்பது. அரசின் திட்டங்களை செயல்படுத்த நினைக்கிற போதும், வங்கியில் வாங்கிய கடனை ரத்து செய்ய நினைக்கிறபோதும், பொதுத் துறை வங்கிகள் பொது மக்களின் வரிப் பணத்தில் தான் நடக்கிறது என்பதை மறந்து செயல் படுகிறது மத்திய அரசாங்கம். 2008-ல் சுமார் 70,000 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயக் கடனை காங்கிரஸ் அரசாங்கம் ரத்து செய்தது இதற்கொரு உதாரணம்.

இன்றைக்கு ஜன் தன் திட்டத்தின் மூலம் பொதுத் துறை வங்கிகளில் எந்தப் பணமும் கட்டாமல் கணக்கு தொடங்கலாம் என்று அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. இதனால் பல கோடி பேர் வங்கிக் கணக்கு தொடங்க முடியும் என்றாலும் இதற்கு ஆகும் செலவைப் பற்றி அவர் நினைத்துப் பார்க்கவில்லை. அவரும் மக்களின் வரிப் பணம்தானே என்று நினைத்துவிட்டாரா?

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சிரத்தையோடு கவனிக்க வேண்டிய நேரமிது. நம் வளர்ச்சி மெதுவாக இருந்தாலும், நிதானமானதாக இருக்க வேண்டும். உலகமே மிகப் பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டியபோது நாம் பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பிக்கக் காரணம், நாம் கடைப்பிடித்த நிதானம்தான். இந்த நிதானத்துடன் பெரிய தவறு எதுவும் நாம் செய்யாமல் இருந்தாலே போதும், எதிர்காலத்தில் நமக்கு எந்த வீழ்ச்சியும் இருக்காது!

- ஆசிரியர்.