Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:

பதியம் போட்டு பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டிய பழமைகளாகட்டும்... புதிதுபுதிதாய் பூக்கும் டெக்னாலஜி பூக்களாகட்டும்... எதுவாக இருந்தாலும், நீங்கள் நினைப்பது போலவே புதுமையான வடிவத்தில், உங்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதில் அவள் விகடனுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். உங்கள் கையில் தவழும் இந்த இரண்டுப் புத்தகங்களின் அட்டைப் படங்களே, அதற்கு சாட்சி!

அட்டைப் படங்களில் ஆரம்பித்து, பக்கத்துக்குப் பக்கம் புதுமையில் தோய்த்தெடுத்த வண்ணக் கலவையாகவே உங்களிடம் சேர்ப்பித்திருக்கிறோம்.

இலக்கிய தாகத்தைத் தீர்த்து வைக்கும் ஸ்டார் எழுத்தாளர்களின் சிறப்புச் சிறுகதை அணிவகுப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்குள்ளே...

வீட்டுக்கே மகாலட்சுமியை அழைத்து வரும், பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் வழங்கும் ஆன்மிகப் பக்கங்கள்!

எதற்கெடுத்தாலும் டென்ஷனைக் கூட்டிக்கொண்டு, மனஅழுத்தத்தில் உழல்வோரின் மனதுக்கு மருந்துபோடும் மருத்துவர் அபிலாஷாவின் ’ஆல் இஸ் வெல்’!

ஒரு நடிகையாக அல்லாமல், உங்களில் ஒருத்தியாக, தான் கடந்து வந்த பாதையில் கண்டெடுத்த அனுபவ பாடங்களை, 'கண்மணி அன்போடு...' என்றபடி உங்களுக்குள் கடத்துவதன் மூலமாக, தன்னம்பிக்கை ஜோதியை ஏற்றிவைக்கக் காத்திருக்கும் நடிகை கவுதமி!

அழகாகக் கட்டிய வீட்டை மேலும் அழகுபடுத்திப் பார்ப்பதற்காக அசத்தல் இன்டீரியர்!

இன்றைய நவநாகரிக உலகில் நவீன மங்கையாக நடைபோடுவதற்கான ஃபேஷன் ஸ்டுடியோ!

இப்படி உங்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்திருக்கிறோம் என்றே நம்புகிறோம். குறிப்பாக, வாழ்க்கையை மேலும் குதூகலப்படுத்தி, முழுமையாக உங்கள் வசப்படுத்தும்விதமாக, இரண்டாவது புத்தகத்தை ’லைஃப் ஸ்டைல்’ என்றே உங்களிடம் சமர்ப்பித்திருக்கிறோம்.

பார்த்துப் பார்த்து செதுக்கிய பக்கங்கள், உங்களை எந்த அளவுக்கு கவர்ந்தன என்பதைத் தெரிந்துகொள்ள, வழக்கம்போல ஆவலோடு காத்திருக்கிறோம். நீங்களும் வழக்கம்போலவே தீட்டுங்கள் கடிதங்களை!

17-ம் ஆண்டுக்காக வாழ்த்துகளை அனுப்பிக் குவித்திருக்கும் தோழி - தோழர்களுக்கும்... மனதார வாழ்த்திக்கொண்டிருக்கும் தோழி - தோழர்களுக்கும்... எங்களின் இதயபூர்வமான நன்றி!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism