Published:Updated:

மோடிக்கு ஒரு சபாஷ்!

மோடிக்கு ஒரு சபாஷ்!

மோடிக்கு ஒரு சபாஷ்!

மோடிக்கு ஒரு சபாஷ்!

Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

மோடிக்கு ஒரு சபாஷ்!

பிரதமர் நரேந்திர மோடியின் முதல் அமெரிக்கப் பயணம் இந்திய பொருளாதாரத் துறையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் பிரதமர்களில் பலர், அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணங்களை மேற்கொண்டனர். ஆனால், பிரதமர் மோடி அரசு தொடர்பான விஷயங்களை ஆலோசிக்கிற அதேநேரத்தில், நம் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான முதலீட்டையும், தொழில் வாய்ப்புகளை கொண்டுவரும் நடவடிக்கை களையும் எடுத்திருக்கிறார். அந்தவகையில், மோடியின் இந்தப் பயணம் ஒரு நல்ல ஆரம்பம்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமெரிக்கப் பயணத்தின்போது அந்த நாட்டின் முக்கிய பெரும் தொழிலதிபர்களைச் சந்தித்து, இந்தியாவில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்ததுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துதரத் தயாராக இருப்பதையும் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். கேட்டர்பில்லர் மற்றும் சிஸ்கோ சிஸ்டம்ஸ் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் மோடி பேச்சை கேட்டுவிட்டு, அவர் மீது புதிய நம்பிக்கை பிறந்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

கடந்த ஆட்சியில் சில நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட பின்னோக்கு வரியானது, இனி எந்தவொரு நிறுவனத்தின் மீதும் விதிக்கப்படாது என மோடி விளக்கம் அளித்திருப்பது வெளிநாட்டு முதலீட்டாளர் களின் பயத்தைப் போக்கி இருக்கிறது.

மோடிக்கு ஒரு சபாஷ்!

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இத்தனை வரவேற்பு தேவையா என சிலர் கேட்கலாம். பெரிய  தொழிற்சாலைகளை உருவாக்கி, பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருகிற அளவுக்கான முதலீடு, வெளிநாட்டு நிறுவனங்களிடம் அதிகம் இருப்பதால், அவர்களைத் தவிர்த்துவிட்டு, நாம் பொருளாதார வளர்ச்சியை அடைந்து விட முடியாது.  ஆனால், அயல்நாட்டு நிறுவனங்கள் நம் வளத்தையும் உழைப்பை யும் மட்டுமே சுரண்டிவிடாதபடி, நாம் நமது சட்டதிட்டங்களை கவனமாக  இயற்ற வேண்டும். உள்நாட்டு நிறுவனங்களை வளர்த்தெடுப்பதிலும் நாம் எந்த வகையிலும் சுணக்கம் காட்டிவிடக் கூடாது.

உலக அளவில் உள்ள பெரும் நிறுவனங்கள் இனி இந்தியாவில் அச்சமில்லாமல் தொழில் தொடங்கலாம் என்பதை மோடி தெளிவாக்கி இருக்கிறார். தனது வார்த்தைகள் ஏட்டளவில் இல்லாமல் செயல் திட்டங்களாக விரைவில் மாறத் தேவையான சீர்திருத்தங்களை, மோடி விரைவுபடுத்தினால் மட்டுமே, இந்தியப் பொருளாதாரம் வேகமெடுக்கும்!

- ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism