Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:

'தீபாவளி என்றாலே... உங்கள் நினைவுக்கு வருவது என்ன?'

- இப்படி ஒரு கேள்வியுடன் இன்றைய அப்பா - அம்மாக்களை பேட்டியெடுத்தால்...

'பட்டாசு, புது டிரெஸ்... அப்புறம் பலகாரம், இதெல்லாம்தான் தீபாவளி!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'எங்கப்பாவுக்கு மொத்தம் நாலு அக்கா, ரெண்டு தங்கைகள். இந்த ஆறு அத்தைகளோட வீட்டுக்கும் தீபாவளி பலகாரம் கொடுக்குறதுக்காகவே, எங்க வீட்டுல இருக்கிற எல்லாரும் ஸ்வீட் மாஸ்டரா மாறிடுவாங்க.'

'பெரியம்மா, சித்தி, பாட்டினு எல்லாருமா ஒண்ணா கூடித்தான் பலகாரங்களை செய்வாங்க. அவங்கள சுத்திச்சுத்தி வந்து ஓடிப்பிடிச்சு விளையாடிட்டு, அப்படியே அவங்க மடியில தூங்கிப் போவோம்.'

நமக்குள்ளே...

'பலகாரம் சுடும்போதே, யாருக்கும் தெரியாம சுட்டுட்டுப் போய் தின்னுத் தீர்த்துடு வோம்ல!'

'எங்க பாட்டி, பரண்ல ஒளிச்சு வெச்சுருக்கிற அதிரசம், முறுக்கையெல்லாம் அப்பப்ப போய், சத்தமில்லாம காலி பண்றதுதான் என்னோட வேலையே!'

'டவுனுக்கு வண்டி கட்டிட்டு போய், வீட்டுல உள்ளவங்களுக்கு, வேலைக்காரங்களுக்குனு துணிமணி எடுத்துக்கிட்டு, அன்னிக்கு ராத்திரி சாப்பாட்டை ஓட்டல்லயே முடிச்சுட்டு... ஒரே கொண்டாட்டம்தான்.'

'ரஜினி படத்துக்கு டிக்கெட் வாங்கறதுக்காக க்யூவுல நின்னு, மொத்த சட்டையும் கிழிஞ்சு, ஒருவழியா டிக்கெட்டையும் கிழிச்சுட்டு உள்ள போனா, கடைசி வரைக்கும் சேர் கிடைக்காம, ஓரமா நின்னு படம் பார்த்துட்டு வந்தது.'

'ம்... அதெல்லாம் ஒரு காலம்' என்ற ஏக்கம் பலரின் பதிலிலும் தொக்கி நிற்பது நன்றாக புரிகிறதுதானே தோழிகளே!

கூட்டாகச் சேர்ந்து, குஷியோடு கொண்டாடிய தீபாவளி சந்தோஷமே தனிதானே..!

தீபாவளிதான் என்றில்லை, எந்தப் பண்டிகையுமே, 'உறவுகளுடனும் நட்புடனும் கொண்டாடி மகிழ்ந்திரு' என்பதைத்தானே பாலபாடமாக நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இன்றைக்கு பெரும்பாலான குடும்பங்கள், உறவுகளை விட்டுத்தள்ளி தனித்தனித் தீவுகளாக இருக்கும் நிலையில், மலரும் நினைவுகளில் மறுகும் சத்தம்தான் பட்டாசுகளைவிட சத்தமாக ஒலிக்கின்றன! அந்தக் காலத்து தீபாவளி நினைவலைகளை அசைபோடுவது மட்டும் போதாது. அந்த மகிழ்ச்சியை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கும் தீபாவளி பரிசாக கொடுக்கலாம்தானே!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism