Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:

'18 வயது என்பது, பெண்கள் திருமணம் செய்வதற்கான பக்குவமான வயது அல்ல. குறைந்தபட்ச வயதை 21 என உயர்த்த வேண்டும்’ என்று அரசாங்கத்துக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் நீதிபதி யோசனை கூறியிருப்பது... நாடு முழுக்கவே விவாதத்தைக் கிளப்பிவிட்டுள்ளது. என்னிடம் மினி பட்டிமன்றமே நடத்திவிட்டனர் வாசக தோழிகள் பலரும்!

அவற்றில் சில, உங்கள் பார்வைக்கு...

'பெண்களைப் போலவே ஆண்களும் 18 வயதில் உடல்ரீதியாக திருமணத்துக்குத் தயாராகிவிடுகிறார்கள். இருந்தாலும் மனரீதியாக தயாராக கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்பதால்தானே, ஆண்களுக்கு 21 வயது என்று வைத்திருக்கிறார்கள். இது பெண்களுக்கும் பொருந்தும்தானே?’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்குள்ளே...

- இது, நீதிமன்றத்தின் பக்கம் நிற்கும் ஒரு வாசகி.

'நல்ல வரன் அமைஞ்சுது. அதான், கல்யாணத்தை முடிச்சுட்டோம் என்று சொல்லி பெண்கள் பலரின் கல்வி, பாதியிலேயே நிறுத்தப்படுகிறது. 21 வயது என்று இருந்தால், குறைந்தபட்சம் பட்டப் படிப்பு வரையாவது படிக்க வைப்பார்களே!’

- பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்போரின் குரல்.

'25, 26 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்வது முக்கியம். அப்படி என்றால்... 18 வயதில் கல்யாணம் நடந்தால்தான், இரண்டு, மூன்று ஆண்டுகள் சந்தோஷ தாம்பத்திய வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, மெதுவாகக் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்...’

- மருத்துவ ரீதியிலான காரணம் காட்டி தங்கள் கட்சிக்கு சிலர் இப்படி வலிமை சேர்க்கிறார்கள்.

'காதலிச்சு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறவங்களுக்கு 20 நாள் கம்மியா இருக்கு... 2 நாள் கம்மியா இருக்குனு இப்பவே ஏகப்பட்ட பிரச்னைகள். இன்னும் 21 வயசுனு சொல்லிட்டா... காதலுக்கு சமாதிதான்!’

இது, காதல் திருமண கட்சியினரின் அக்கறையான ஆதங்கம்.

'18 வயதில் ஓட்டுப் போட்டு நாட்டை ஆள்பவரைத் தீர்மானிக்கும் ஒரு பெண்ணுக்கு, வாழ்க்கையைத் தீர்மானிக்கும பக்குவம் மட்டும் அந்த  வயதில் வராதா?’

- இப்படி வாட்ஸ்ஆப் வாசகி முன்வைக்கிறார் ஸ்மார்ட் தர்க்கம்.

அப்பப்பா... ஒவ்வொருவரின் வாதத்திலும்தான் எத்தனை எத்தனை அழுத்தங்கள்! ஆனாலும், அரசாங்கத்தின் முடிவுதானே, இதற்கு தீர்ப்பு எழுத முடியும். அது என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள நானும் ஆர்வமாகக் காத்திருக்கிறேன்.

உரிமையுடன்,

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism