Published:Updated:

தனித்திரு... விழித்திரு... வாசித்திரு... - விகடனுக்குத் தேவை... உங்கள் ஆதரவு! #SupportJournalism

Vikatan
Vikatan

பல்வேறு வதந்திகளுக்கு இடையே உறுதியான தகவல்கள்... அதே நேரத்தில், நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரக்கூடிய வகையிலும் செய்திகள்/கட்டுரைகள்!

பிசிக்கல் டிஸ்டன்ஸிங்... தனிநபர் சுகாதாரம், நெரிசலான பொது இடங்களைத் தவிர்த்து வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருப்பது என சமூகத்திலிருந்து தனிமைப்பட்டிருக்க வேண்டியது இப்போது காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது. அனைத்து நிறுவனங்களும் முடிந்தளவு, தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறார்கள், தந்துகொண்டிருக்கிறார்கள், தரவேண்டும்.

கொரோனா
கொரோனா

கொரோனாவின் 'சங்கிலித் தொடர் பரவலை' முறியடிக்கும் 'பிசிக்கல் டிஸ்டன்ஸிங்' முறையை நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியது அவசியம். இப்படியாக, 'போதுமான இடைவெளி'யுடன் நடமாடுவதும், 'பாதுகாப்பாக' உரையாடுவதும் கொரோனா சங்கிலியின் கண்ணிகளை தகர்த்தெறியும்.

மருத்துவம், சுகாதாரம், தூய்மைப் பணிகள் போலவே இதழியலும் அத்தியாவசியப் பணி என்பதை அறிவீர்கள். அதுவும், வாட்ஸ்அப் வதந்திகள் சூழ்ந்த இந்தக் காலகட்டத்தில் இதழியல் பணியின் சவால்கள் ஏராளம்.

இந்த வேளையில், விகடன் டீமும் ஒருபக்கம் தற்காப்புடன் களப்பணியும், இன்னொரு பக்கம் வீட்டிலிருந்தே எடிட்டோரியல் பணியும் மேற்கொண்டுள்ளது.

சீனாவில் முதன்முதலில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்தே நம் தளத்தில் அதுதொடர்பான செய்திகளும் கட்டுரைகளும் விரைந்தும் விரிவாகவும் வழங்க ஆரம்பித்துவிட்டோம். இதை எண்ணிக்கையாகப் பார்த்தால், மூன்று மாத காலத்துக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டென்ட்டுகளை வெளியிட்டிருப்பது நிச்சயம். குறிப்பாக, நம் மக்களுக்கு உண்மை நிலவரத்தை உறுதிசெய்து சொல்வதிலும், முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு சரியாக வழிகாட்டுவதும்தான் நமது செயல்பாடாக இருக்கிறது.

"நீள பெருமூச்சை இழுத்து 10-லிருந்து 12 நொடிகள் வரை நிறுத்தி விடும்போது, தொண்டையில் வலியோ, தொடர் இருமலோ வந்தால், உங்களுக்கு கொரோனாவின் தாக்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்..."
"27 டிகிரி செல்சியஸுக்கு மேல் இந்த வைரஸ் தாங்காது. எனவே, இந்தியா மாதிரி வெப்பமண்டல நாடுகளில் இது தாக்குப்பிடிப்பது அரிதிலும் அரிது..."
`12 மணிநேர ஆயுட்காலம்...27 டிகிரி செல்சியஸ்!’- #Corona வதந்திகளும் விசாரித்த உண்மையும் #Factcheck
கொரோனா வதந்தி
கொரோனா வதந்தி

- இவை போன்ற கொரோனா குறித்த பொய்யான தகவல்களின் வாட்ஸ்அப் பரவல் இன்னும் நின்றபாடில்லை. இவற்றை பொய் என்று நிபுணத்துவத்துடன் நிரூபிப்பதுடன், உண்மையான செய்திகளைப் பின்புலத்துடன் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் கடுமையான உழைப்பை விதைத்து வருகிறோம். கொரோனாவுக்கு மட்டுமல்ல... மக்கள் கவனத்தை ஈர்க்கக் கூடிய எல்லா விஷயங்களிலும் இப்படி மெனக்கெட வேண்டியிருக்கிறது. அதைத் தீவிரமாகச் செய்கிறோம்.

மாஸ்க் அணிவது முதல் கைகளைக் கழுவது வரை எந்தச் செயல்பாடுகளாக இருந்தாலும், இவற்றைச் செய்யும் வழிமுறைகளிலும் கொரோனாவை நம்மிடம் அண்டாமல் செய்வதற்கு செய்ய வேண்டியவற்றைத் துல்லியமாக வழிகாட்டுவதிலும் முழுவீச்சுடன் இயங்கி வருகிறோம்.

இப்போது, தொடர்ந்து பல்வேறு வதந்திகளுக்கு இடையே உறுதியான தகவல்களைத் தரும் அதேவேளையில், வீட்டில் இருக்கும்போது உங்களுக்குக் கிடைக்கும் நேரங்களில் நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரக்கூடிய வகையிலும் செய்திகள்/கட்டுரைகளை வழக்கத்துக்கும் அதிகமாகவே அளித்து வருகிறோம்.

விகடனின் 3 வகையிலான அப்டேட்ஸ்!

1. ஈரோடு தொடங்கி இத்தாலி வரையிலும் கொரோனா தொடர்பாக எத்தனை எத்தனை தகவல்கள்! அவற்றில் பலவும் மக்களை அதீதமாகக்கூடிய வதந்திகளாகவோ அல்லது தவறான வழிநடத்தக்கூடிய தகவல்களாகவோ இருக்கின்றன. இந்தச் சூழலில், நம் மக்கள் நிச்சயமாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டிய கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளைக் கச்சிதமாகத் திரட்டி, நிபுணர்கள் - டேட்டாக்கள் உள்ளிட்ட பல அடுக்குகளில் உறுதி செய்தபின், உரிய புகைப்படங்கள், இன்ஃபோகிராஃபிகள், வீடியோக்களுடன் செய்திக் கட்டுரைகளை வழங்கி வருகிறோம். ஒருபக்கம் கொரோனா தொடர்பான செய்திகளும், மறுபக்கம் முன்னெச்சரிக்கை - வழிகாட்டும் கைடன்ஸ் கட்டுரைகளையும் அளிக்கிறோம்.

கொரோனா
கொரோனா

2. கொரோனா தொடர்பான நம்பகமான செய்திகள் - தகவல்கள் - வழிகாட்டுதல்கள் வழங்கும் அதேவேளையில், 'Physical Distancing' பின்பற்றி வீட்டிலிருந்தே பணிபுரியும் நம் வாசகர்களுக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்குமான கன்டென்ட்டுகளை அதிகளவில் தருவதில் நம் டீம் தீவிரம் காட்டி வருகிறது. பொழுதுபோக்கு சார்ந்து வெளியே செல்ல முடியாத அனைவருக்கும் பயனுள்ள முறையில் வாசிப்பு அனுபவத்தைத் தருவதுதான் இந்த நோக்கத்தின் மையம்.

நம்மை மேம்பட்டவர்களாகச் செதுக்கக் கூடிய வாசிப்பு எனும் பழக்கம் குறைந்துவருவதை நீங்கள் அறிவீர்கள். நம்மால் வாசிப்பை நேசிக்க முடியாத அளவுக்கான லைஃப்ஸ்டைலை உருவாக்கிக்கொண்டோம் என்பது வேறுவிஷயம். ஆனால், அதை மீட்டெடுக்க வேண்டியதும் அவசியம்தானே! அந்த வகையில், இதோ இப்போது தனித்திருக்கும் தருணங்களை வாசிப்பில் மீண்டும் ஈடுபாடு கொள்ளவும், நம்மை வாசிப்பில் இன்பத்தை நாடவும் பயன்படுத்திக்கொள்ளலாம்தானே!? இதற்காகவே சினிமா, கலை, இலக்கியம் எனப் பல தளங்களிலும் அசத்தலான கன்டென்ட்டுகளை வழங்குகிறது விகடன்.

3. மேற்கண்ட 2 விஷயங்களைத் தாண்டி, நம் இயல்பு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அப்டேட்டுகளையும் வழக்கம்போல் வழங்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

விகடன் இதழ்களில் என்னதான் இருக்கிறது?

ஆனந்த விகடன் - சமூக, அரசியல், சினிமா, கலை, இலக்கியம், நையாண்டி என அனைத்து ஏரியாவிலும் எப்போதும் தனித்துவமாகவும், காலத்துக்கு ஏற்ப அப்டேட்டாகவும் மக்களை மகிழ்வித்தும், நல்ல இதழியல் - வாசிப்பு அனுபவத்தைத் தந்தும் வருகிறது.

ஜூனியர் விகடன் - குரலற்றவர்களின் குரலாகவும், சமூக - அரசியல் - குற்றப் பின்னணிகளை யாருக்கும் அஞ்சாமல் நேர்படச் சொல்லும் மக்களுக்கான காலத்தில் கண்ணாடியாகவும் விளங்குகிறது.

நாணயம் விகடன்
நாணயம் விகடன்

அவள் விகடன் - தமிழ்க் குடும்பங்களின் தலைமகளாக, தன்னம்பிக்கை முதல் லைஃப்ஸ்டைல் வரை, என்டர்டெயின்மென்ட் முதல் ஹெல்த் வரை பெண்களுக்கான கம்ப்ளீட் பேக்கேஜாக வலம் வருகிறது.

நாணயம் விகடன் - பணத்தைப் பெருக்கும் தாரக மந்திரமாக, அஞ்சல் சேமிப்பு முதல் பங்குச் சந்தை முதலீடு வரை வாரம்தோறும் வழங்கும் வழிகாட்டுதல்கள் ஏராளம். நிதி சார்ந்த விஷயங்களை எளிய தமிழில் சொல்வதில் ஈடில்லை இதற்கு.

பசுமை விகடன் - வெற்றி விவசாயிகளின் அனுபவப் பாடங்கள் தொடங்கி மகசூல் உத்திகள் வரையில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்தவும், விவசாயிகளின் உற்பத்தியைப் பெருக்கவும் துணைபுரிகிறது.

சக்தி விகடன் - திருக்கதைகள், திருத்தலங்கள், ஆன்மிகத் தொடர்கள் மட்டுமன்றி ஜோதிடமும் நிறைந்த ஆன்மிக மணம் கமழும் ஆனந்த ஆலயமாகத் திகழ்கிறது.

மோட்டார் விகடன் - தமிழில் தன்னிரகற்ற ஆட்டோமொபைல் இதழ் என்ற சிறப்புடன், உங்கள் வீட்டு பைக், கார், கேட்ஜெட்டுகளின் தோழனாகப் பயணிக்கிறது.

அவள் கிச்சன் - பாரம்பர்யம் தொடங்கி ஃபாரின் வரையிலும் விதவிதமான ரெசிப்பிகளை உங்கள் கிச்சனுக்குக் கொண்டுவந்து ஆரோக்கியமும் சுவையும் குடும்பத்தில் கூட்ட துணைபுரிகிறது.

இதழ்கள் மட்டுமா..?

விகடன் டிஜிட்டலில் இதழ்களைப் போலவே தினமும் அப்டேட் செய்யப்படும் ப்ரைம் கன்டென்ட்டுகளும் வாசகர்களின் பலதரப்பட்ட தேவைகளை மட்டுமே கருத்தில்கொண்டவை.

உடனுக்குடன் முக்கியச் செய்திகள், முக்கியச் செய்திகளை ஒட்டிய அலசல்கள், எக்ஸ்க்ளூசிவ் பேட்டிகள் என நறுக்கென தகவல்கள் தரும் சுருக்கமான செய்திகளும், ஆழமான அலசல்களுடன் கூடிய கட்டுரைகளும் இங்கே தினம் தினம் ஏராளம்.

இளையராஜாவின் இன்ஸ்பிரேஷனல் கதை #VikatanOriginals
இளையராஜாவின் இன்ஸ்பிரேஷனல் கதை #VikatanOriginals

பொக்கிஷங்களும் வசதிகளும்!

* 2006 முதல் இப்போது வரை விகடன் இதழ்களில் வெளிவந்த அனைத்து கன்டென்ட்டுகளிலும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வலம் வரலாம்.

* வெப் - மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம்.

* ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்து வாசித்துப் பயன்பெறலாம்.

இப்போது ஏன் அவசியம் கூடுகிறது?

பிசிக்கல் டிஸ்டன்ஸிங்கில் இருந்தாக வேண்டிய சூழலில், உங்கள் வாசிப்புக்கான சுரங்கமாகவே விகடன் டிஜிட்டல் திகழும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' தொடங்கி சு.வெங்கடேசனின் 'வீரயுக நாயகன் வேள்பாரி' வரை காலத்தால் அழியாத பல தொடர்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாசித்துப் பயனடையலாம்.

சுட்டி குட்டிக் கதைகள்
சுட்டி குட்டிக் கதைகள்

உங்கள் வீட்டுச் சுட்டிகளை எங்கேஜிங்காக வைத்துக்கொள்ளவும், அவர்களுக்கு வாசிப்பு ருசியைக் காட்டவும் நம் சுட்டி விகடன் இதழ்கள் அனைத்திலும் வலம் வரலாம்.

நாஸ்டாலஜி அனுபவங்களை மீட்டெடுக்கவும், அன்றைய நாள்களில் நடந்தவற்றை அறியவும், இப்போது மகத்தான ஆளுமைகளாக இருப்பவர்களின் அப்போதைய பேட்டிகளை வாசித்து வித்தியாசம் அறியவும்... இப்படி எத்தனையோ வகைகளில் உங்களின் வாசிப்புக்குத் தீனிபோடுகிறது விகடன் டிஜிட்டல் களம்.

விகடனுக்கு தேவை... உங்கள் ஆதரவு!

> குரலற்றவர்களின் குரலாக, மக்கள் பக்கம் நிற்பதில் உறுதி.

> வதந்திகள் சூழ் உலகில் உண்மைகளை நாடுவதில் தீவிரம்.

> நம்பகத்தன்மையுடன் செய்திகளை வழங்குவதில் நேர்த்தி.

> அனைத்துக் கோணங்களையும் முன்வைப்பதில் முனைப்பு.

> அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துவதில் மாறாத துணிவு.

கொரோனா பயம்
கொரோனா பயம்

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று களத்திலிருந்து மக்களுக்கான இதழியல் பணியை மேற்கொள்ளவே முக்கியத்துவம் தருகிறோம். திரட்டும் செய்திகள் மட்டுமன்றி, அனைத்துக் கோணங்களையும் மக்களுக்குத் தருவதற்காக, கடும் உழைப்புடன்கூடிய பின்புலப் பணிகளைச் செய்கிறோம். வாசகர்களின் தேவைக்கேற்ப எழுத்து, போட்டோ, ஆடியோ, வீடியோ என எல்லா வடிவங்களிலும் கவனம் செலுத்துகிறோம்.

இணைய இதழ்கள் தொடங்கி ஃபேஸ்புக் லைவ் அப்டேட்ஸ் வரை, மேம்பட்ட தொழில்நுட்பங்களின் துணையுடன் செய்திகளை வழங்குவதில் நேர்த்தியைப் பின்பற்றுகிறோம். போதுமான மனித வளமும், தொழில்நுட்ப மேம்பாடும், இதரச் செலவினமும் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமில்லை என்பதை அறிவீர்கள். அதுவும் இப்போது நிலவுவதுபோன்ற பேரிடர் காலத்தின் நிலைமையை இன்னும் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆம், இந்த இதழியல் தரம்... நிரந்தரம் ஆவதை உங்கள் பங்களிப்பே உறுதி செய்யும்.

இதற்கு...

விகடனுக்குத் தேவை... உங்கள் ஆதரவு!

மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த சந்தா தொகை, விகடன் இதழ்களின் விலை மட்டுமல்ல; விகடனின் இதழியலுக்கு நீங்கள் அளிக்கும் கரம்!

> எகானமி பேக்: ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மற்றும் நாணயம் விகடன் ஆகிய 3 இதழ்களுக்கு, ரூ.549 மதிப்பிலான 3 மாதங்களுக்கான டிஜிட்டல் சந்தா இப்போது ரூ.199 மட்டுமே... சப்ஸ்க்ரைப் செய்ய இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/2UFBWoj

> சப்போர்ட்டிவ் சலுகை: ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், நாணயம் விகடன், சக்தி விகடன், பசுமை விகடன், மோட்டார் விகடன், அவள் கிச்சன்... விகடன் குழும இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு