Published:Updated:

"புது வீட்டோடு படிப்புக்கும் வழிகாட்டியிருக்காங்க!"

சேவை
பிரீமியம் ஸ்டோரி
News
சேவை

சேவை

ங்கும் பசுமை போர்த்தியபடி இயற்கை அரணாகக் காட்சியளிக்கும் தென்னை மரங்கள், அடர்ந்து வளர்ந்திருக்கும் முந்திரி, மா, பலா, வாழை என எங்கும் மரம், செடி, கொடி மற்றும் நெற்பயிர்களுடன் செழிப்பாக இருந்த டெல்டா மாவட்டங்களை, கடந்த 2018, நவம்பர் 15-ம் தேதி வீசிய கஜா புயல் நிலை குலைய வைத்தது. பிள்ளையாக வளர்த்த தென்னை, ஆசையாக வளர்த்த மா, பாசமாக வளர்த்த பலா மரங்களைப் புயல் சாய்த்துப்போட, எதிர்காலமே சூன்யமாகிவிட்டது போலத் துயரத்தில் மூழ்கினர் மக்கள்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கப் பல தரப்பிலிருந்தும் உதவிக்கரங்கள் நீண்டன. அந்த வகையில், ஆனந்த விகடனும் களத்தில் இறங்கியது. நிதி கேட்டு வேண்டுகோளும் விடுத்தது விகடன். அதையேற்று விகடன் அலுவலகத்துக்கே வந்த நடிகர் கார்த்தி, தன் சகோதரர் சூர்யா சார்பாகவும், தன் சார்பாகவும் 20 லட்சம் ரூபாய் வழங்கினார். வாசகர்களும் நிதியை அள்ளி வழங்கினார்கள். விகடன் குழும ஊழியர்கள் மற்றும் விகடன் குழுமமும் நிதியைச் சேர்க்க... மொத்தமாகத் திரண்டது 1,43,79,224 ரூபாய். ஆனந்த விகடனின் அறத்திட்டப் பணிகளுக்காக விகடன் குழுமத்தில் இயங்கிவரும் வாசன் அறக்கட்டளை மூலமாக நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்த விகடன் குழுவினர் மூலம், உடனடித் தேவையான மளிகைப் பொருள்கள், உணவுத் தேவைகள் போன்றவை நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டன.

நாள் கணக்கில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடவு செய்யப்பட்டிருந்த பயிர்கள் கருகும் நிலை உருவானது. அவர்களில் ஏழை விவசாயிகள் சிலரைக் கண்டறிந்து, ‘ஜெனரேட்டர்’ மூலமாக ‘மோட்டார்’ வைத்துத் தண்ணீர் இறைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இப்படிச் சுமார் 130 ஏக்கர் அளவிலான பயிர்கள் காப்பாற்றப்பட்டன. வீழ்ந்துகிடந்த தென்னை மரங்களை அகற்றிக் கொடுத்ததோடு, புதிதாகத் தென்னங்கன்றுகளை நட்டு வளர்ப்பதற்கான பயிற்சிகளையும் வேளாண் வல்லுநர்கள் மூலமாகக் கொடுத்தோம்.

‘கான்கிரீட்’ வீடு
‘கான்கிரீட்’ வீடு
‘கான்கிரீட்’ வீடு
‘கான்கிரீட்’ வீடு
‘கான்கிரீட்’ வீடு
‘கான்கிரீட்’ வீடு
‘கான்கிரீட்’ வீடு
‘கான்கிரீட்’ வீடு
‘கான்கிரீட்’ வீடு
‘கான்கிரீட்’ வீடு
‘கான்கிரீட்’ வீடு
‘கான்கிரீட்’ வீடு


இதன் தொடர்ச்சியாக, நிரந்தரத் தீர்வாக ‘கான்கிரீட்’ வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டம் தயாரானது. முதல்கட்டமாக, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனம், முதலியார்தோப்பு, வேட்டைக்காரணிருப்பு ஆகிய பகுதிகளில் 10 வீடுகள் கட்டப்பட்டு, கடந்த 06.12.2019-ம் தேதி ஒப்படைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி அருகே முத்தன்பள்ளம் கிராமத்தில் குடிசை வீட்டிலிருக்கும் 16 குடும்பங்களுக்கும் ‘கான்கிரீட்’ வீடுகள் கட்டும் பணிகளையும் தொடங்கினோம். வீட்டுமனைப் பட்டா உள்ளிட்டவை தொடர்பான அரசு அதிகாரிகளின் பரிசீலனைகள் ஒரு பக்கம் நீண்டன; இடையில் கொரோனா வேறு குறுக்கிட்டது. அனைத்தையும் கடந்து கட்டுமானப் பணிகள் நிறைவுற்று 13 குடும்பங்களிடம் முறைப்படி நவம்பர் 18-ம் தேதி வீடுகள் ஒப்படைக்கப்பட்டன.

கனமழை நீடித்த நிலையில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை உடனடியாக ஒப்படைப்பதுதான் அவர்களுக்குக் காலத்தினாற் செய்த உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில், 13 வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. மழை உள்ளிட்ட சில காரணங்களால் மூன்று வீடுகளின் பணிகள் தாமதாகிவிட்டன. பருவமழை முடிந்த கையோடு, விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அந்த மூன்று வீடுகளும் ஒப்படைக்கப்படும்.

குடும்பத்தினருடன் உணர்ச்சிப் பெருக்கோடு வீட்டுச் சாவிகளைப் பெற்றுக்கொண்ட, 13 குடும்பத்தினரும் தங்களின் நன்றிகளை விகடன் வாசகர்களுக்கும் விகடன் குழுமத்துக்கும் ஆனந்தக் கண்ணீர் மூலமாகச் சேர்ப்பித்தனர்.

“புயல்ல எங்க குடிசை பிச்சிக்கிட்டுப் போயிடுச்சு. ரெண்டு பிள்ளைகளை வச்சிக்கிட்டு ரொம்பக் கஷ்டப்பட்டோம். இலவசமா கிடைச்ச தார்ப்பாயை வச்சி, குடிசை மாதிரி அமைச்சிக்கிட்டுக் குடியிருந்தோம். பிள்ளைங்களோட புத்தகம், சான்றிதழ் எல்லாம் புயல்ல போச்சு. படிக்கிற பிள்ளைங்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க.

‘கான்கிரீட்’ வீடு
‘கான்கிரீட்’ வீடு
‘கான்கிரீட்’ வீடு
‘கான்கிரீட்’ வீடு
‘கான்கிரீட்’ வீடு
‘கான்கிரீட்’ வீடு


நான், என்னோட வீட்டுக்காரரு ரெண்டு பேருமே விவசாயக் கூலிங்க. அதுல வர்ற வருமானத்தை வச்சுதான் குடும்பத்தை நடத்தணும். அதுவரைக்கும் குடிசைக்குள்ளேயே வாழ்க்கையை ஓட்டிடலாம்னுதான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, கஜா பெரிய படிப்பினையைக் கொடுத்துட்டுப் போயிடுச்சு. செலவுகளைச் சிக்கனமாக்கி ‘கான்கிரீட்’ வீடு கட்டுறதுக்காகப் பணத்தைச் சேமிக்கணும்னு திட்டம்போட்டு, சேமிக்க ஆரம்பிச்சேன். அந்த நேரத்துலதான் கடவுள் மாதிரி விகடன் வாசகர்களும், விகடனும் சேர்ந்து எங்களுக்கு வீடு கட்டிக்கொடுத்திருக்காங்க. வீட்டுக்காகச் சேமிக்க ஆரம்பிச்ச பணத்தைத் தொடர்ந்து சேமிக்கப் போறேன். அதை எங்க பிள்ளைங்க படிப்புக்காகப் பயன்படுத்தப்போறேன்.

விகடன் வீட்டை மட்டும் கொடுக்கல... பிள்ளைங்களோட படிப்புக்கும் இப்ப ஒரு வழியைக் காட்டியிருக்கு. எங்க காலம் உள்ளவரைக்கும் இந்த உதவிகளை மறக்கமாட்டோம்’’ என உற்சாகம் பொங்கச் சமுத்திரம் சொன்னதை, ஒட்டுமொத்த கிராமமுமே ஆமோதித்தது. நிம்மதி பெருமூச்சுடன் திரும்பினோம்.

திருவாரூர் மாவட்டம், பூசலாங்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ராஜேந்திரன் வீடும் கஜா புயலால் சேதமடைந்தது. அவருக்கும் கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

உதவிக்கரம் நீளும்!

கஜா நிவாரண நிதி வழங்கிய வாசகர்களின் பட்டியல்.

https://qr.page/g/kVlHOog8g

வாசன் அறக்கட்டளை மேற்கொண்ட கஜா நிவாரண பணிகள்.

https://qr.page/g/kVlHOog8g