Published:Updated:

ஆனந்த விகடன் மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ... நிபுணர்களுடன் வெபினாரில் உரையாடலாம்!

Vikatan Digital Education Expo
Vikatan Digital Education Expo

வீட்டிலிருந்தபடியே துறை சார்ந்த வல்லுநர்களிடம் உங்கள் சந்தேகங்களுக்கான விடை பெறலாம். உங்கள் கனவு படிப்பை நீங்கள் பெற உங்களுடன் விகடன் உடன்நிற்கிறோம், வாழ்த்துகள்.

ஹாய் ஸ்டூடண்ட்ஸ்,

இக்கட்டான இந்தச் சூழலில் தேர்வுகளை முடித்துள்ள ப்ளஸ் டூ மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். மே மாதம் மாணவர்களுக்கு எப்போதுமே ஒரு முக்கியமான காலகட்டம். ப்ளஸ் டூ முடித்ததும் கல்லூரி வாழ்க்கை பற்றி சிந்தனைகள் விரியத் தொடங்கும். கனவுகளுக்கான முதற்படியில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்குச் சில கேள்விகள் தோன்றும். `என்ன படிக்கலாம்', `எந்தக் கல்லூரியில் படிக்கலாம்', `எந்தப் படிப்புக்கு எதிர்காலம்?’... பல கல்லூரிகளுக்கு நேரில் சென்று விசாரிப்பது. கருத்தரங்குகளுக்குச் சென்று ஆலோசனைப் பெறுவது எனப் பல வழிகளில் எதிர்காலம் குறித்த திட்டமிடல்கள் நிகழும் காலம் இது.

விகடன் Expo
விகடன் Expo

ஆனால், கொரோனா லாக் டெளன் காரணமாக இன்று எல்லோரும் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறோம். கல்லூரி படிப்பு பற்றிய சிந்தனையுடன், கொரோனாவும் சேர்ந்துகிடக்கும் இந்தச் சூழலைக் கடந்து தெளிந்த நீரோடைபோல மனதை மாற்ற ஒரு சிறு முன்னெடுப்பு.

உங்கள் கனவுப் படிப்புக்கு உங்களுடன் கரம் கோக்கிறது விகடன். எப்போதும்போல மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டும் பணியை இந்தச் சூழலிலும் உங்களுக்காக முன்னெடுக்கிறது. நீங்கள் உங்கள் வீட்டில் பத்திரமாக இருந்தபடியே உங்களுக்கான கேள்விகளைச் சந்தேகங்களைக் கேட்கவும், நிபுணர்களுடன் உரையாடவும் வகை செய்கிறோம்.

இணையம் வழியாக நடக்கவுள்ள விகடனின் `மெகா டிஜிட்டல் எக்ஸ்போ'வில் நீங்கள் பங்கேற்றுப் பயனடையலாம். உங்களுக்கு வேண்டிய அனைத்துத் தகவல்களையும் வெபினார் வழியே உங்களிடம் கொண்டு வருகிறோம். வெபினாரில் உங்களுக்குத் தகவல் தர நிபுணர்கள் பலர் இணைய உள்ளனர்.

விகடனின் இந்த `மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ'வின் முக்கிய அம்சங்கள்:

1. தற்போதுள்ள அசாதாரண சூழலில் ஏற்படும் மன அழுத்தத்தைத் தவிர்ப்பது எப்படி?

2. எந்தப் படிப்புக்கு எதிர்காலம் சிறப்பாக உள்ளது?

3. இன்ஜினீயரிங்கில் எந்தெந்த படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன?

4. மிகக் குறைந்த செலவில் சிறந்த கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் படிக்க எழுத நுழைவுத் தேர்வுகள்.

எக்ஸ்போவின் முக்கிய அம்சங்கள்
எக்ஸ்போவின் முக்கிய அம்சங்கள்

5. நல்ல கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி? கல்லூரியைத் தேர்வு செய்கையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை?

6. நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படித் தயார்செய்வது?

7. புதிய படிப்புகள், பரவலாக நிறைய பேரால் படிக்கப்படாத படிப்புகள், ஆனால் அவை எதிர்காலமுள்ள படிப்புகளாக இருக்கும். அவை என்ன படிப்புகள்?

8. உங்களுக்குப் பொருத்தமான படிப்புகளை எப்படித் தேர்வு செய்வது ?

இப்படி உங்கள் மனதுக்குள் உள்ள பல கேள்விகளுக்கு விடை காண விகடனின் இலவசக் கல்வி வெபினாரில் இணைந்து பயனடையுங்கள். இந்த ஆலோசனைகளுக்காக உடனடியாக உங்கள் இடத்தை முன்பதிவு செய்யலாம்.

எப்போது நடக்கிறது? ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் யார்?

உங்களுக்கான கனவுகளை நோக்கி நீங்கள் முன்னேற உங்களுக்கு வழிகாட்ட வெபினாரில் இணையும் நிபுணர்கள்;

நாள் -1 ( 9-5-2020)

Session -1:

1. Dr. சி.சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ், டி.ஜி.பி, ரயில்வே & இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை.

2. டி.நெடுஞ்செழியன், கல்வி ஆலோசகர், நிறுவனர், இந்தியா காலேஜ் ஃபைண்டர் அமைப்பு.

சிறப்பு பேச்சாளர்கள்
சிறப்பு பேச்சாளர்கள்

Session - 2:

டாக்டர். சங்கர சரவணன், கல்வியாளர், துணை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் கழகம்.

நாள்- 2 ( 10-5-2020)

எம். ரமேஷ் பிரபா, கல்வி ஆலோசகர், தலைவர், கேலக்ஸி மேனேஜ்மெண்ட் நிறுவனம்.

Dr. ஆர்.ராஜராஜன், கல்வி ஆலோசகர், இயக்குநர், ஸ்டூடண்ட்ஸ் விஷன் அகாடமி.

எப்படி வெபினாரில் இணைவது?

மிகச் சுலபமாக நீங்கள் வெபினாரில் இணையலாம். https://special.vikatan.com/vikatan-digital-educationexpo/ என்ற தளத்தில் சென்று பதிவு செய்யுங்கள்.

வீட்டிலிருந்தபடியே துறை சார்ந்த வல்லுநர்களிடம் உங்கள் சந்தேகங்களுக்கான விடை பெறலாம். உங்கள் கனவு படிப்பை நீங்கள் பெற உங்களுடன் விகடன் உடன்நிற்கும். வாழ்த்துகள்.
அடுத்த கட்டுரைக்கு