வாசகர்கள் அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவு காரணமாக, மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது ஆனந்த விகடன். இந்தியப் பத்திரிகைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ‘Indian Readership Survey - 2019 (Q2)’ ஆய்வறிக்கை முடிவுகள், தொடர்ந்து ‘ஆனந்த விகடன்’ நம்பர் 1 தமிழ் வார இதழாக விளங்குவதை உறுதி செய்திருக்கிறது.

2017 (Indian Readership Survey - 2017) மற்றும் 2019 முதல் காலாண்டு ஆய்வு முடிவுகளின்படி (Indian Readership Survey - 2019 (Q1) ) ஆனந்த விகடனே ‘நம்பர் 1’ தமிழ் இதழாக விளங்கியது. இப்போது வாசகர்களின் பேராதரவுடன் மூன்றாவது முறையாக ‘நம்பர் 1’ என்ற இடத்தை ஆனந்த விகடன் தக்கவைத்திருக்கிறது என்பதைப் பெருமகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம். மேலும் இந்தியாவில் வெளியாகும் அனைத்து மொழிப் பத்திரிகைகளில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றிருக்கும் ஒரே தமிழ் இதழ் என்கிற உயரிய கௌரவத்தையும் ‘ஆனந்த விகடன்’ பெற்றுள்ளது என்றால் எல்லாப் புகழும் வாசகர்களுக்கே!

சென்ற காலாண்டு முடிவில், இந்திய அளவில் 12வது இடத்தில் இருந்த ‘ஆனந்த விகடன்’, இம்முறை 10வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இந்த டிஜிட்டல் யுகத்திலும் ஆனந்த விகடனை வாசிக்கும், 30 வயதுக்கு உட்பட்ட இளம் வாசகர்கள் 56 சதவிகிதம் என்று இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வாசகர்களின் ரசனைக்குத் தொடர்ந்து தீனி போடுவதாலேயே இந்த வெற்றிகள் சாத்தியம் என்பதால் அதைத் தொடர்ந்து தர வேண்டிய பெரும்பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என்பதை உணர்கிறோம். இந்தப் புகழும் பெருமையும் 93 ஆண்டுகளாக ஆதரவு நல்கும் வாசகர்களாகிய உங்களையே சேரும்.

இந்தத் தருணத்தில் தரமான பங்களிப்புகளை வழங்கும் எழுத்தாளர்களுக்கும் படைப்பாளிகளுக்கும், நியாயமான விலையில் விகடனை வாசகர்களுக்கு அளிப்பதற்குத் துணைநிற்கும் விளம்பரதாரர்களுக்கும், ஆனந்த விகடன் இதழை அக்கறையுடன் கொண்டு சேர்க்கும் முகவர்கள், விற்பனையாளர்கள், வீடுகளில் விநியோகிக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வெற்றிக்கு என்றென்றும் காரணமாக இருக்கும் வாசகர்களுக்கு நன்றி, நன்றி, நன்றி!