Published:Updated:

வாருங்கள் வாசகர்களே..! நம் உறவுகளின் துயர் துடைப்போம்!

Corona Relief Fund
Corona Relief Fund

விகடன் குழுமத்தின் சேவை நிறுவனமான ‘வாசன் சாரிடபிள் டிரஸ்ட்’ சார்பில், ‘கொரோனா நிவாரண’ப் (COVID 19 Relief) பணிகளை முன்னெடுக்கிறோம்.

வரலாறுகளில் படித்திருக்கிறோம். கிராமப்புறங்களில் ஒலிக்கும் கதைப்பாடல்களில் கேட்டுக் கடந்து போயிருக்கிறோம். இப்படியொரு மருத்துவப் பேரிடரை நம்காலத்தில் எதிர்கொள்வோம் என்று யாரும் கற்பனைகூடச் செய்திருக்கமாட்டோம். மொத்த உலகத்தையும் கொரோனாத் தொற்று துவம்சமாக்கிக்கொண்டிருக்கிறது. மிகப்பெரும் உயிர்ச் சேதத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. ஒரே தீர்வு, சமூக விலகல் மட்டுமே என்பதால் மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கிறார்கள். தொழில்கள் முடங்கி, உற்பத்தியும் குறைந்துவிட்டது. கொரோனாவுடனான இந்த யுத்தத்தில், அமைப்புசாராத் தொழிலாளர்களும், அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் எளிய மக்களும் பெரும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஒருவேளை உணவுகூட சரியாகக் கிடைக்காமல் தவிக்கிறார்கள். சாலையோரம் வாழ்ந்த மக்கள், நாடோடிகள், பழங்குடி மக்களின் துயரங்களைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

அரசுகள், தன்னார்வலர்கள் எனக் களமிறங்கி உதவினாலும் தேவை பூர்த்தியாகவில்லை. போதுமான முகக்கவசங்கள் இல்லாமல் தவிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கைகொடுக்க வேண்டும்; உணவில்லாமல் தவிக்கின்ற நம் உறவுகளைக் காப்பாற்றியாக வேண்டும்... இதுபோன்றவைதான் தற்போதைக்கு நம்முன்பாக இருக்கும் ஆகப்பெரும் பொறுப்புகள்.

விகடன் அந்தப் பொறுப்பை உணர்கிறான். விகடன் குழுமத்தின் சேவை நிறுவனமான ‘வாசன் சாரிடபிள் டிரஸ்ட்’ மூலம், ‘கொரோனா நிவாரண’ப் (COVID 19 Relief) பணிகளை முன்னெடுக்கிறோம்.
  • ஆனந்த விகடன் பங்காக, ‘வாசன் சாரிடபிள் டிரஸ்ட்’ வழியாக 10 லட்ச ரூபாய் ஒதுக்குகிறோம்.

  • ‘இந்த அரும்பணியில் எங்களின் பங்கும் இருக்கவேண்டும்‘ என்கிற எண்ணத்திலிருக்கும் வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்களையும் மனதில்கொண்டு, இந்த ஏப்ரல் மாதத்தில் விகடன் குழுமத்துக்காக உங்கள் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து (விகடன் குழும இதழ்களின் சந்தா, ஆன்லைன் சந்தா, விளம்பரங்கள், பிரசுர புத்தகங்கள் உள்ளிட்டவை) 10 சதவிகிதத் தொகையை உங்கள் சார்பில், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு ‘வாசன் சாரிடபிள் டிரஸ்ட்’ வழியே கூடுதலாக அர்ப்பணிக்கவுள்ளோம்.

  • பேரிடரில் தவிக்கும் முகமறியா மக்களுக்கு எப்போதுமே மனமுவந்து உதவிகளைச் செய்யக் காத்திருக்கும் வாசகர்களிடமிருந்து நேரடியாகவும் பங்களிப்பைக் கோருகிறோம்.

வழக்கம்போலவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவிகள் சென்று சேரும் வகையிலேயே நிவாரணப் பணிகள் திட்டமிடப்படுகின்றன. அனைத்து விவரங்களும் அவ்வப்போது விகடன் குழும இதழ்கள் மற்றும் விகடன் இணையதளம் மூலம் பகிரப்படும்.

நேரடியாக உதவி செய்ய விரும்பும் வாசகர்கள், இயன்ற தொகையை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்யலாம். கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோடு: (IFSC) CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.
Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749) /03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
வெளிநாட்டு வாசகர்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோடு: IDIB000C032, ஸ்விப்ட் கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம்.

நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் ‘COVID 19 Relief’ என்று மறவாமல் குறிப்பிடவும். கூடவே உங்களின் பெயர், ஊரினைத் தவறாமல் குறிப்பிடவும். முகவரி மற்றும் தொடர்பு எண்களையும் குறிப்பிடுவதும் நல்லது. மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.

வாருங்கள் வாசகர்களே... நம் உறவுகளின் துயர் துடைப்போம்! - ஆசிரியர்

குறிப்பு: கடந்தகாலங்களில் உங்களோடு கரம்கோத்து விகடன் முன்னெடுத்த பணிகள் பல உண்டு. அவற்றில், ‘நிலம் நீர் நீதி’ மற்றும் ‘கஜா துயர் துடைப்போம்’ ஆகிய பணிகள் தற்போதும் தொடர்கின்றன. பணி பற்றிய விவரங்கள், கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை ‘வாசன் சாரிடபிள் டிரஸ்ட்’ இணையப்பக்கத்தில் http://vasancharitabletrust.org/ கொடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு