Published:Updated:

மறந்துவிடக் கூடாது!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

மறந்துவிடக் கூடாது!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

கொரோனா பெருந்தொற்று மீண்டும் வேகமெடுத்திருக்கிறது. கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் இந்தியாவுக்குள் கொரோனா நுழைந்தபோது, நாடே ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டது. இத்தகைய இக்கட்டான சூழலில், நாட்டின் உணவுத் தேவைக்காக வழக்கம்போல ஓயாமல் களத்தில் உழைத்துக்கொண்டிருந்தது விவசாயிகளாகிய நீங்கள்தான். பசிப்பிணி தீர்க்கும் பயிர் மருத்துவர்களான விவசாயிகளின் அரும்பணியை அப்போது நாடே கொண்டாடியது. உங்களின் உழைப்பு, நாட்டின் ஜி.டி.பி-யிலும் எதிரொலித்தது.

இப்போதும் உங்களின் பங்களிப்பைத்தான் நாடே நம்பிக் கிடக்கிறது. உங்களால்தான் நாடே உயிர்ப்புடன் இருக்கிறது... என்றென்றும் இருக்கவும் போகிறது. இதற்காக ஓயாமல் உழைக்கும் அதேசமயம், ‘கிராமப்புறத்தில்தானே இருக்கிறோம்... வயல்வெளியில்தானே கிடக்கிறோம்’ என்று அசட்டையாக இருந்துவிடக் கூடாது. கடந்த ஆண்டுபோல் அல்லாமல், இந்த ஆண்டு அனைத்துவிதமான சேவைகளும் தொடர்கின்றன. குறிப்பாக, ஒட்டுமொத்த மக்களும் வழக்கம்போல நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே, நகரம், கிராமம் என வேறுபாடின்றி கொரோனா பரவவே செய்கிறது. எனவே, முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி எனத் தேவையான பாதுகாப்பு அம்சங்களை அனைவருமே பின்பற்ற வேண்டும்.

இங்கே, மத்திய-மாநில அரசுகளுக்கும் ஒரு வேண்டுகோள். இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மற்றும் மலர்கள் என விளைபொருள்களை பெருநகரங்களுக்குக் கொண்டு செல்வது தடைபட்டிருக்கிறது. இதனால், விலையானது அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. விளைபொருள்களை நகர்ப்புறங்களுக்கு எடுத்துச் செல்வதில் நிறைய கெடுபிடிகள் காட்டப்படுவதுதான் முக்கியக் காரணம். இந்த உண்மையை உணர்ந்து, விளைபொருள்களை அத்தியாவசியமாகக் கருதி, அவற்றைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு, ஆம்புலன்ஸுகளுக்கு இணையான முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்.

தவறினால்... கிராமப்புறப் பொருளாதாரம் கடுமையான பாதிப்பைச் சந்திக்க நேரிடும். உற்பத்தி ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படும். விலைவாசி உயர ஆரம்பித்து நகர்ப்புற மக்களும் கடுமையான பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளாவார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

மறந்துவிடக் கூடாது!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism