உலகத்தின் பல நாடுகளில் உள்ள மக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நம் மக்களின் சேமிக்கும் பழக்கம் மிகச் சிறப்பாகவே இருந்துவருகிறது. சேமிப்பு மற்றும் சிக்கனத்தின் முக்கியத்துவத்தை சிறுவயது முதலே நம் குடும்பங்களிலும் பள்ளிகளிலும் சொல்லித் தரப்படுவதே இதற்கு முக்கியமான காரணம்.

இன்றைய நிலையில், சேமிப்பு என்பதிலிருந்து சிறிதும் நழுவாமல், முதலீடு என்கிற இலக்கை நோக்கி முன்னேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சேமிப்பு என்பது, விதை நெல்லை எடுத்து வைப்பது. முதலீடு என்பது விதை நெல்லை நிலத்தில் விதைத்து, ஒரு நெல்லிலிருந்து நூறு நெல்மணிகளை உருவாக்குவது. சேமிப்பு நம் செல்வத்தை அழியாமல் வைத்திருக்கும். முதலீடு என்பது நம் செல்வத்தை இன்னும் பல மடங்காகப் பெருக்கும் மாயாஜாலத்தைச் செய்வது. சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாம் இனி, முதலீடு என்கிற கண்ணோட்டத்திலும் கவனத்தைச் செலுத்தியாக வேண்டியது அவசியம்.

முதலீடு என்று வரும்போது மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான முதலீட்டு முறைகளையே தேடித் தேடிச் செல்கின்றனர். உதாரணமாக, நம் மக்களிடம் ரூ.5 லட்சம் கிடைத்தால், அதை அப்படியே தங்கம் வாங்கிவிடுகின்றனர். அல்லது, வீட்டுமனை வாங்கிவிடுகின்றனர். இருப்பதற்கு ஒரு வீடும், அணிந்து அழகு பார்க்க தங்கம் நகைகளும் அவசியம்தான்.

ஆனால், ஒரு வீடு வாங்கிய பின் இரண்டாவதாக, மூன்றாவதாக வீட்டுமனை வாங்குவதிலேயே குறியாக இருப்பதால், செல்வத்தைப் பெருக்குவதற்குப் பதில், குறைக்கவே செய்கிறோம். ஓரளவுக்கு தங்க நகைகள் வீட்டில் இருக்கும்போது, மேலும் மேலும் அதை வாங்கி, பாதுகாக்க முடியாமல் நிம்மதியை இழப்பதுடன், செல்வத்தைப் பெருக்கும் வாய்ப்பையும் தடுத்துக்கொள்கிறோம்.

தங்கம், ரியல் எஸ்டேட் என்பதை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிதி சார்ந்த முதலீடுகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பங்குச் சந்தையின் செயல்பாடுகள் பற்றி புரிந்துகொள்வதற்கு கொஞ்சம்கூட முயற்சி செய்யாமல், அது ஒரு சூதாட்டம் என்று நினைத்து ஒதுக்கிவிடுவது புத்திசாலித்தனமான அணுகுமுறையாக நிச்சயம் இருக்க முடியாது!

எந்தவொரு முதலீட்டு முறையிலும் நம்மிடம் உள்ள மொத்தப் பணத்தையும் முதலீடு செய்யாமல், நம் எதிர்காலத் தேவையை சரியாக நிறைவேற்றும் முதலீட்டு முறைகளை நன்கு ஆராய்ந்து, பிரித்து முதலீடு செய்வதை ஒரு வழக்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

பலவிதமான முதலீடுகளில் பிரித்து செய்வதன் மூலமே, இனிவரும் காலத்திலாவது பணவீக்கம் என்பதைத் தாண்டி நம்மால் வருமானத்தை ஈட்டி, நமது செல்வத்தை பல மடங்காக உயர்த்த முடியும்!

- ஆசிரியர்