நம் பொருளாதார வளர்ச்சி குறித்து மேலும் ஓர் அதிர்ச்சிச் செய்தி வந்து சேர்ந்திருக்கிறது. சர்வதேசத் தரக் குறியீட்டு நிறுவனமான மூடிஸ் (Moody’s), இந்தியப் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மந்தநிலையில் இருந்துவருவதால், அதை ‘நிலையானது’ (Stable) என்ற நிலையிலிருந்து ‘எதிர்மறை’ (Negative) என்ற நிலைக்குத் தரமிறக்கம் செய்திருக்கிறது.

கடந்த ஓராண்டாகவே வங்கிசாரா நிதி நிறுவனங்கள் பெரும் நிதிச் சிக்கலில் சிக்கியிருக்கின்றன. வீடுகள் விற்பனையாவது மிகவும் குறைந்திருக்கிறது. ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களைக்கூட வாங்க முடியாத நிலை பல குடும்பங்களில் நிலவுகிறது. வழக்கமாக தீபாவளியின்போது அதிக அளவில் வாகனங்கள் விற்பனையாகும். ஆனால், கடந்த தீபாவளியில் வாகனங்கள் விற்பனையும் சொல்லிக் கொள்ளும்படி உயரவில்லை. இத்தனைக்கும் ரூ.90 ஆயிரம் கோடி அளவுக்கு மத்திய அரசு தனிநபர் கடன் தந்தும் விற்பனையில் பெரிய அளவில் மாற்றமில்லை.

இது ஒரு பக்கமிருக்க, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 3.7 சதவிகிதமாக உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ‘நமது ஜி.டி.பி-யில் 3.3% அளவுக்கு மட்டுமே நிதிப் பற்றாக்குறை இருக்கும். அதைத் தாண்டிச் செல்ல அனுமதிக்க மாட்டோம்’ என மத்திய அரசின் தரப்பில் பலமுறை சொல்லப்பட்டபோதும், நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து உயர்ந்துவருவது, `நம் பொருளாதாரம் நம் கட்டுப்பாட்டில் இல்லை’ என்பதையே காட்டுகிறது.

மேலும், நமது ஜி.டி.பி வளர்ச்சியும் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவிகிதத்தை அடைந்திருக்கிறது. `ஆண்டுதோறும் 10 சதவிகிதத்துக்கு மேல் பொருளாதாரம் வளர்ந்தால்தான், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக மாற முடியும்’ என்கிறபோது, 5% வளர்ச்சி என்பது இந்தியப் பொருளாதாரத்துக்கு முன்னேற்றமல்ல என்பதால்தான் மூடிஸ் தரமிறக்கம் செய்திருக்கிறது.

பிற சர்வதேசத் தரக் குறியீட்டு நிறுவனங்களான ஃபிட்ச், எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங் ஆகியவை நம் பொருளாதாரத்தை ‘நிலையானது’ என்ற நிலையிலேயே வைத்திருக்கின்றன. ஆனால் மூடிஸ் தற்போது செய்திருக்கும் தரமிறக்கத்தை மத்திய அரசு மிக முக்கியமான எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம், மூடிஸைத் தொடர்ந்து பிற சர்வதேசத் தரக்குறியீட்டு நிறுவனங்களும் நம் பொருளாதார வளர்ச்சியைத் தரமிறக்கினால், பல பாதகமான விளைவுகளையே நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நம் பொருளாதார வளர்ச்சி குறைவதைத் தடுத்து நிறுத்தி, முன்னேற்றத்துக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனே எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டும்தான் நமது பொருளாதாரம் குறித்த நல்ல செய்திகளை இனி நம்மால் கேட்க முடியும்!

- ஆசிரியர்