நம் நாட்டின் 14 முக்கியமான வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு இன்றோடு ஐம்பது ஆண்டுகளாகிவிட்டன. (பிற்பாடு மேலும் ஆறு வங்கிகள் தேசியமய மாக்கப்பட்டன). இந்தியா சுதந்திரமடைந்தபின் எடுக்கப்பட்ட மிக முக்கியமான நடவடிக்கையாக வங்கிகள் தேசியமயமானதைப் பற்றி பாராட்டுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

இந்த நடவடிக்கைக்குக் காரணமாக இருந்த பிரதமர் இந்திரா காந்தி, தனது அரசியல் செல்வாக்கினை உயர்த்திக்கொள்ளவே இந்த நடவடிக்கையை எடுத்தார் எனச் சிலர் சொன்னாலும், இந்த நடவடிக்கைக்குப் பிறகே சாதாரண மனிதர்களுக்கும் வங்கிச் சேவை என்பது சாத்தியமானது. இதனால் மக்களிடம் சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, பொருளாதாரம் உயர்வதற்கு ஒரு காரணமாகவும் அமைந்தது.

இவ்வளவு பெரிய வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த வங்கித் துறையானது இன்றைக்குச் சந்திக்கும் பிரச்னைகள் ஒன்றிரண்டல்ல. பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் மொத்த வாராக் கடன் சுமார் ரூ.13 லட்சம் கோடியாக இருக்கிறது. இதில் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் மட்டுமே சுமார் ரூ.10 லட்சம் கோடி. வாராக் கடன் தொடர்பான பிரச்னை களைத் தீர்ப்பதில் திவால் சட்டம் ஓரளவுக்கு உதவியாக இருந்தாலும் முழுமையான தீர்வைத் தந்துவிடுவதாக இல்லை.

புதிதாகக் கடன் தருவதற்கு வங்கிகளிடம் போதிய அளவு மூலதனமும் இல்லை. மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளில் ரூ.2.5 லட்சம் கோடிக்குமேல் நிதி (இந்த ஆண்டு ரூ.70,000 கோடி உள்பட) ஒதுக்கியபின்பும் வங்கிகள் போதிய அளவுக்குக் கடன் தருவதற்கு மூலதனம் இல்லாமல் தவிக்கின்றன. குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் கோடியாவது வங்கிகளுக்கு மூலதனம் தரவேண்டும். ஆனால், இவ்வளவு பணம் அரசிடமே இல்லை!

ஆனால், தனியார் வங்கிகளோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிவேக வளர்ச்சியினைக் கண்டுவருகின்றன. தனியார் வங்கிகள் லாபத்தினை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால், எல்லா சேவைகளுக் கும் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால், சேவையைக் கருத்தில்கொண்டு செயல்படுவதால் பொதுத்துறை வங்கிகள் தரும் சேவைகளுக்கான கட்டணத்தை அதிகம் உயர்த்த முடிவதே இல்லை.

இப்படிப் பல பிரச்னைகள் இருந்தாலும் நம் நாட்டு முன்னேற்றத்தின் முதுகெலும்பாகப் பொதுத்துறை வங்கிகளே உள்ளன. இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்கிற நிலையை அடைய வேண்டுமெனில், பொதுத்துறை வங்கிகளின் பங்கு இன்னும் அதிகரிக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகள் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்யத் தேவையான உதவியை மத்திய அரசு தொடர்ந்து செய்யவேண்டும். வங்கி அதிகாரிகளும் மக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு!