எது நடக்கக் கூடாது என்று நினைத்தோமோ, அது நடந்தேவிட்டது. இந்த நிதியாண்டின், இரண்டாம் காலாண்டில் நமது ஜி.டி.பி 4.5% எனும் அளவுக்குக் குறைந்திருக்கிறது. `கடந்த 26 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான வளர்ச்சி இது’ என்பதைக் கேட்கும்போது நமக்கு ஏற்படும் வருத்தத்துக்கு அளவே இல்லை.

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே, நம் பொருளாதார வளர்ச்சி மறைமுகமாகச் சரிந்துவந்தது. ஆனால், கடந்த மே மாதத்தின் மத்தியில் புதிய ஆட்சி வந்த பிறகு நம் பொருளாதாரம் வெளிப்படையாகவே சுணங்கத் தொடங்கியது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி 5 சதவிகிதமாகக் குறைந்தது. `ஜி.டி.பி வளர்ச்சி இதற்கு மேலும் குறையக் கூடாது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்’ என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பொருளாதாரத்தை முன்னேற்றவில்லை.

உற்பத்தித்துறையின் வளர்ச்சி அண்மைக் காலமாக குறைந்து கொண்டேயிருக்கிறது. கடந்த நிதியாண்டின், முதல் காலாண்டில் 12.1 சதவிகிதமாக இருந்த உற்பத்தித்துறையின் வளர்ச்சி, இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் -1.0 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. அதேபோல விவசாயம், கட்டுமானம் ஆகிய துறைகளின் வளர்ச்சியும் கணிசமாகக் குறைந்திருக்கின்றன.

ஆனால், இந்த நிலையிலும், ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பதுபோலப் பேசுகிறார்கள் மத்திய அமைச்சர்கள். ‘பொருளாதார வளர்ச்சி சிறிது குறையலாம்; ஆனால், மந்தநிலை (Recession) என்ற நிலை இல்லவே இல்லை’ என்று டெக்னிக்கலாகப் பேசிச் சமாளித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இப்போது ஏற்பட்டிருப்பது பொருளாதார வளர்ச்சிக் குறைவா அல்லது மந்தநிலையா என்ற விவாதத்தை நடத்தி எந்த உபயோகமும் இல்லை. வளர்ச்சியின்மையால் சாதாரண மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரியும்போது, அவர்கள் படும் துன்பத்துக்கு என்ன தீர்வு என்பதைக் கண்டறிந்து, அதைச் செயல்படுத்துவதே மத்திய அரசின் முதல் பணியாக இருக்க வேண்டும்.

நமது கவலையெல்லாம், 4.5% என்ற அளவைவிட நமது ஜி.டி.பி கீழே சென்றுவிடக் கூடாது என்பதே. உலகப் பொருளாதாரமே வளர்ச்சிக் குறைவில் இருக்கும்போது, இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சியும் குறையவே செய்யும். என்றாலும், அதையே ஒரு சாக்காகச் சொல்லி, நம் பொருளாதார வளர்ச்சி அதலபாதாளத்துக்குச் செல்ல நாம் அனுமதிக்கக் கூடாது.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் அடுத்த காலாண்டிலாவது நம் ஜி.டி.பி வளர்ச்சி இன்னும் அதிகமாகும்!

- ஆசிரியர்