Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

வெற்றிபெற்ற பெண்கள் அனைவருக்கும் நம் வாழ்த்துகளும் அன்பும்.

நமக்குள்ளே...

வெற்றிபெற்ற பெண்கள் அனைவருக்கும் நம் வாழ்த்துகளும் அன்பும்.

Published:Updated:
நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

சாதிக்க வயதோ, சூழலோ தடையல்ல என்பதை இந்த உள்ளாட்சித் தேர்தலில் நிரூபித்திருக்கிறார்கள் தமிழகப் பெண்கள். உதாரணம்... திருப்பூரைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி விசாலாட்சி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி சந்தியா ராணி... நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறங்கி வெற்றிபெற்றிருக்கும் பெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இவர்கள்.

மூன்று ஆண்டுக்கால தாமதத்துக்குப்பின் நடைபெற்றிருக்கும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பெருமளவில் பெண்கள் பங்கேற்க வழிவகுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 2016-ம் ஆண்டில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் மகளிருக்கு 50 சதவிகித ஒதுக்கீட்டை உறுதிசெய்து உத்தரவு பிறப்பித்திருந்தார் அவர். இப்போது இந்தியா முழுக்க 20 மாநிலங்களில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்கீழ் உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிருக்கான 50 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெரும்பாலும் பெண் வேட்பாளர்களை அந்தந்தக் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் பின்னின்று இயக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சொல்லப்படுவதுண்டு. அதில் ஓரளவு உண்மை இருந்தாலும்கூட, பெண்கள் தனித்து இயங்கும் ஒரு வெளியை இந்த உள்ளாட்சித் தேர்தல் அமைத்துத் தந்திருக்கிறது. தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குவதும் அதன்பின் அந்தப் பணியைத் தொடர்வதும் அத்தனை எளிதல்ல. தொடர் பிரசாரம், அலைச்சல், அரசியல் என்று ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருக்கவேண்டிய நிலை. கூடவே குடும்பம், குழந்தைகள் என்று வீட்டையும் கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியம். இத்தகைய சூழலில் கல்லூரி மாணவிகள், 60 வயதைக் கடந்த சீனியர்கள் என்று இந்த முறை தேர்தலில் போட்டியிட்டு வென்றிருக்கும் பெண்கள் நம் கவனத்தைப் பெரிதும் கவர்கிறார்கள்.

ஆணைவிடப் பெண் மல்டி டாஸ்கிங் செய்வதில் கில்லாடி; பெண்ணால் எந்தச் சூழலிலும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதற்கு நம் வீடுகளில் உள்ள பெண்களே சாட்சி. இத்தகைய எளிய பெண்கள் வீட்டின்மீது கொண்டிருக்கும் அதே அக்கறையை சமூகத்தின்பாலும் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இயல்பிலேயே கருணையும் அன்பும் நிறைந்தவர்கள் என்பதால், உள்ளூர்ப் பிரச்னைகளை மக்களாட்சியின் அடிவேரிலிருந்து இந்தப் பெண்களால் சரிசெய்ய முடியும். கல்வி, சுற்றுப்புறச்சூழல், ஏழ்மை ஒழிப்பு, வேளாண்மை, சுகாதாரம், தண்ணீர் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றைத் திறம்பட நிர்வகிப்பதில் வல்லமை படைத்தவர்கள் பெண்கள்.

வெற்றிபெற்ற பெண்கள் அனைவருக்கும் நம் வாழ்த்துகளும் அன்பும். தங்கள் பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து அவர்கள் செயல்பட வாழ்த்துகள்!

நமக்குள்ளே...