கடந்த வாரம் பங்குச் சந்தை வரலாறு காணாத உச்சத்தை எட்டியதில் முதலீட்டாளர்கள் மகிழ்ந்துபோயிருக்கிறார்கள். கடந்த ஓராண்டு காலத்தில் பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸும் நிஃப்டியும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஏற்றம் கண்டிருக்கின்றன. சென்செக்ஸ் குறியீடு ஓராண்டுக்கு முன்னர் 35200 புள்ளிகளிலிருந்து உயரத் தொடங்கி, 42000 புள்ளிகளைத் தாண்டியிருக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் சென்செக்ஸ் தந்த வருமானம் 15 சதவிகிதத்துக்குமேல். இதேபோல நிஃப்டி குறியீடு 10550 புள்ளிகளிலிருந்து உயரத் தொடங்கி, கடந்த வாரம் 12389 புள்ளிகளை எட்டியிருக்கிறது. கடந்த ஓராண்டில் நிஃப்டி தந்த வருமானம் 13.50%. வேறு எதில் கிடைக்கும் இந்த இரட்டை இலக்க வருமானம்?

பங்குச் சந்தை உச்சத்தைத் தொட முக்கியக் காரணம், `வெளிநாட்டு நிறுவன முதலீடு’ என்று சொல்லப்படும் எஃப்.ஐ.ஐ-கள். கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2019-ம் ஆண்டில் மட்டும் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு எஃப்.ஐ.ஐ-க்கள் நம் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் பொருளாதார வளர்ச்சி இல்லை. `இரட்டை இலக்கத்தில் வருமானம் பெற வேண்டுமென்றால் இந்தியாவில்தான் முதலீடு செய்ய வேண்டும்’ என்று வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ஆராய்ந்து முடிவெடுத்திருப்பதால்தான் நம் பங்குச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்துவருகிறார்கள்.

நம் நாட்டு முதலீட்டாளர்களும் பங்குச் சந்தையில் நேரடியாகவும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலமும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு எஸ்.ஐ.பி மூலம் ரூ.98,612 கோடி பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. எஸ்.ஐ.பி மூலம் பங்குச் சந்தையில் முதலீடாகும் தொகை கடந்த டிசம்பரில் ரூ.8,518 கோடியாக உயர்ந்திருக்கிறது. பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் வேண்டுமென்றால், இனி பங்குச் சந்தை மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்ய வேண்டும் என்பதை நம்மவர்கள் சரியாகப் புரிந்துவைத்திருப்பதால்தான் தொடர்ந்து முதலீடு செய்துவருகிறார்கள்.

ஒரு தனிமனிதனுக்கு அடிப்படைத் தேவை ஆயுள் காப்பீடும், மருத்துவக் காப்பீடும்தான். இந்த இரண்டுக்குப் பிறகு ஒருவரின் எதிர்காலத் தேவைக்கான நிதியைப் பெற பங்குச் சந்தை முதலீடு முக்கியமானதாக இருக்கும். இன்னும் அதிகமானவர்களை பங்குச் சந்தையில் ஈடுபடுத்தத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். பங்குச் சந்தையில் இருக்கும் ரிஸ்க்கை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொண்டு, நீண்டகால நோக்கில் முதலீடு செய்தால் நாட்டுக்கும் நன்மை, நமக்கும் நன்மை என்பது நிச்சயம்!

- ஆசிரியர்