மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 2020-21-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். `பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதால் பெருமளவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நாடு மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வர வேண்டும்’ என்றே எல்லோரும் எதிர்பார்த்தனர். மக்களின் இந்த எதிர்பார்ப்பை ஓரளவுக்கே பூர்த்தி செய்திருக்கிறார் நிதியமைச்சர்.

கடந்த ஆண்டு நாடு முழுக்க நல்ல மழை பெய்ததால், விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு 16 அம்சத் திட்டங்களை அறிவித்ததற்காக நிதியமைச்சரைப் பாராட்டலாம். விவசாயத்துறைக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் இலக்கு; விவசாயம் மற்றும் பாசனம் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1.60 லட்சம் கோடி ஒதுக்கீடு; ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் திட்டத்துக்கு ரூ.1.23 லட்சம் கோடி ஒதுக்கீடு என விவசாயத்துறையின் மீது நன்றாகவே கவனம் செலுத்தியிருக்கிறார். ஆனால், இந்த அறிவிப்புகளால் ஏற்படும் பயன்கள் ஏழை விவசாயியையும் சென்றடையுமா?

தொழில் மற்றும் வர்த்தகத்துறை வளர்ச்சிக்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு செய்து, பல திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்கலாம். என்றாலும், தற்போது நிலவும் மந்தநிலையைப் போக்க இந்த அறிவிப்புகள் போதுமா... பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் உள்கட்டமைப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டிய நிலையில், ஏற்கெனவே அறிவித்த ரூ.103 லட்சம் கோடித் திட்டத்தை மீண்டும் பேசி என்ன பயன்?

பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கும் இந்த பட்ஜெட் மனநிறைவைத் தரவில்லை. பட்ஜெட் தாக்கலான அன்றே சென்செக்ஸும் நிஃப்டியும் சமீபத்தில் இல்லாத அளவுக்கு இறக்கம் கண்டன. தனிநபர் வரிச் சலுகை வரம்பை மாற்றியமைத்ததில் சம்பளதாரர்களுக்கு பெரிய அளவில் நன்மை எதுவும் இல்லை என்பதும் கவலைதரும் விஷயமே.

எல்.ஐ.சி-யின் பங்குகளை ஐ.பி.ஓ மூலம் விற்பனை செய்வதற்கு அரசாங்கம் துணிந்து முடிவெடுத்திருப்பதைப் பாராட்டலாம். அரசின் இந்த முடிவைப் பலரும் எதிர்க்கலாம் என்றாலும், ஏற்கெனவே ஐ.பி.ஓ வந்த அரசு நிறுவனங்கள் பல நல்ல நிலையில் செயல்படுவதை நாம் கவனிக்கத் தவறக் கூடாது.

ஆக மொத்தத்தில், சிலபல பாசிட்டிவ் அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் அறிவிப்புகளும் திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இன்னும் அதிக அளவில் வெளியாகியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட அறிவிப்புகளையும் நடவடிக்கைகளையும் நிதியமைச்சர் இனியாவது வெளியிடுவார் என்று எதிர்பார்ப்போம்!

-ஆசிரியர்