Published:Updated:

பொருளாதார வளர்ச்சியின் ஆரம்ப அறிகுறிகள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

பொருளாதார வளர்ச்சியின் ஆரம்ப அறிகுறிகள்!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

எதிர்வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வெளியான சில நாள்களிலேயே நமது பொருளாதார வளர்ச்சி குறித்த நல்ல செய்திகள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி நம் நாட்டு முன்னேற்றத்தைப் பாடாகப்படுத்திவந்தது பொருளாதார சுணக்கம். இந்த நிலை எப்போது மாறும் என எல்லோருமே ஏங்கிக் கொண்டிருக்க, அதற்கான ஆரம்ப அறிகுறிகள் இப்போது தெரிய ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியான விஷயமே.

`நிக்கி மேனுஃபேக்சரிங் பர்ச்சேஸிங் மேனேஜர்ஸ் இண்டெக்ஸ்’ என்பது நமது உற்பத்தித்துறை எந்த நிலையில் இருக்கிறது என்பதைச் சொல்லக் கூடியது. இந்தக் குறியீட்டை, பொருளாதார நிபுணர்கள் அனைவருமே ஏற்றுக்கொள்கின்றனர். இந்தக் குறியீட்டின்படி கடந்த டிசம்பரில் 52.7 புள்ளிகளாக இருந்த நமது உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜனவரியில் 55.3 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு நமது உற்பத்தி இவ்வளவு புள்ளிகளைப் பெறுவது இதுவே முதன்முறை. அது மட்டுமல்ல, `ஐ.ஹெச்.எஸ் மார்கிட் இந்தியா சர்வீசஸ் பிசினஸ் ஆக்டிவிட்டி இண்டெக்ஸ்’ என்பது நம் நாட்டின் சேவைத்துறையின் வளர்ச்சியைக் குறிப்பது. கடந்த டிசம்பரில் 53.3 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது, கடந்த ஜனவரியில் 55.5 என்ற புள்ளிகள் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதுவும் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத நிலை.

தொழில் நிறுவனங்கள் மூலப் பொருள்களைப் புதிதாக வாங்குவதால், உற்பத்தி மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. விற்பனையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. சேவைத்துறை நிறுவனங்களின் வருமானமும் பெருக ஆரம்பித்திருக்கிறது. இதனால் புதியவர்களை வேலைக்கு எடுக்கும் போக்கும் உருவாகியிருக்கிறது என்பதையே இந்தக் குறியீடுகளின் உயர்வு நமக்குக் காட்டுகிறது. மேலும், கடன்களுக்கான வட்டி விகிதத்தை ஆர்.பி.ஐ அதிகரிக்காமல் இருப்பதும் நம் தொழில்துறை வளர்ச்சிக்குச் சாதகமே. பணவீக்கம் தற்போது 7.4% என்ற நிலையில் இருப்பதால், வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஆர்.பி.ஐ.க்கு. அப்படிச் செய்தால், தொழில் வளர்ச்சி பாதிப்படையும் என்பதால், அதை செய்யாமல் விட்டிருக்கிறது ஆர்.பி.ஐ.

என்றாலும், இந்த மாற்றங்களை ஓர் ஆரம்ப அறிகுறியாக மட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, நமது பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது என்று முடிவு செய்துவிடக் கூடாது. இந்தக் குறியீடுகள் அடுத்தடுத்து வரும் மாதங்களில் எப்படி இருக்கும் என்பது தெளிவாகத் தெரிந்த பிறகே நம் நாடு உண்மையில் முன்னேறுகிறதா என்று சொல்ல முடியும். எதிர்காலம் குறித்து நாம் நம்பிக்கையுடன் இருப்போம்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism