எதிர்வரும் 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். மத்திய அரசின் பட்ஜெட்டைப்போல, மாநில அரசாங்கங்களின் பட்ஜெட் பெரிய அளவில் பேசப்படுவதில்லை. ஆனால், இந்த ஆண்டு தமிழக பட்ஜெட் பல காரணங்களால் மக்களின் கவனத்தைப் பெற்றிருப்பது சிறப்பு.

சென்னை - குமரி தொழில் மண்டல வழித்தட திட்டத்துக்காக ரூ.1,000 கோடி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.3,100 கோடி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.1,650 கோடி, பொன்னேரியில் புதிய தொழில்முனைய தொழில் மேம்பாட்டுத் திட்டம் என அரசு அறிவித்திருக்கும் திட்டங்கள் எல்லாமே பாராட்டும்படியாக இருக்கின்றன. இந்தத் திட்டங்களை அறிவித்த கையோடு மறந்துவிடாமல், செயல்படுத்திக் காட்டினால்தான் மக்களின் முழுமையான பாராட்டைப் பெற முடியும்.

தொழில்துறை வளர்ச்சிக்கு ரூ.2,500 கோடி, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைக்கு ரூ.607 கோடி, உமையாள்புரம், புத்திரகவுண்டன் பாளையம் ஆகிய ஊர்களில் புதிய சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைத்தல் போன்ற திட்டங்களால் தமிழகத்தில் இன்னும் பல லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த பட்ஜெட்டில் பாசிட்டிவ்வான அம்சங்கள் இப்படியிருக்க, இரண்டு விஷயங்கள் சாதாரணக் குடிமகனைக் கவலைப்பட வைத்திருக்கின்றன. முதலாவது, அதிகரித்துவரும் கடன். தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ.4,56,660 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட ரூ.59,165 கோடி அதிகம். இந்தக் கடன், நமது மாநில ஜி.டி.பி-யில் 21.83%. இது ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருக்கும் அளவைவிடக் குறைவுதான். என்றாலும், நம்மைவிடப் பெரிய மாநிலங்களான மகாராஷ்டிராவும் குஜராத்தும் குறைந்த அளவில் கடன் வைத்திருக்க, நாம் மட்டும் கடனை அதிகரித்துக்கொண்டே போவது சரியா... அதைக் குறைக்காமல்விட்டால், அடுத்த ஆண்டில் நமது மொத்தக் கடன் ரூ.5.5 லட்சம் கோடி ஆகிவிடும்.

நாம் வரவைவிட அதிகமாகச் செலவு செய்ததால், நிதிப் பற்றாக்குறை ரூ.22,000 கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. ஜி.எஸ்.டி வரி தொடர்பாக மத்திய அரசிடமிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய வரி கிடைக்காமல் இருப்பதுதான் இந்தப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம். என்றாலும், இலவச திட்டங்களை நிறுத்தினாலே பற்றாக்குறை கணிசமாகக் குறைந்துவிடும். இனியாவது இலவசங்களைக் காட்டி மக்களின் கவனத்தைப் பெற நினைக்காமல், வளர்ச்சித் திட்டங்களில் தமிழக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தினால் மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.

- ஆசிரியர்