Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

நாடெங்கும் பேசுபொருளாக மாறியிருக்கிறது முத்தலாக் தடைச் சட்டம்.

நமக்குள்ளே...

நாடெங்கும் பேசுபொருளாக மாறியிருக்கிறது முத்தலாக் தடைச் சட்டம்.

Published:Updated:
நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

க்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் வெளிநடப்பையும் தாண்டி `முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா 2019’ வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறது. குடியரசுத் தலைவரின் அனுமதியும் பெற்று சட்டமாகிவிட்டது. `இந்தச் சட்டம் இயற்றப்பட வேண்டும், முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று கடந்த சில ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருந்த முஸ்லிம் பெண்கள் இதனால் பெருமகிழ்ச்சி கொண்டுள்ளனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2015-ம் ஆண்டு கணவரின் உடனடி முத்தலாக் மூலம் பாதிக்கப்பட்டு, நீதிப் போராட்டத்தைத் தொடங்கியவர் சாயிரா பானு. `இந்தச் சட்டம் எனக்கு மகிழ்ச்சி தந்தாலும், என் போராட்டம் இன்னும் ஓயவில்லை’ என்று சொல்கிறார் இவர். இன்னும் தன் குழந்தைகளைப் பார்க்கும் உரிமையைக்கூட இவருக்கு மறுத்திருக்கிறார் கணவர். இவருடன் முத்தலாக் எதிர்ப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் இணைந்து நடத்திய சக்கியா சோமன், இஷ்ரத் ஜஹான், குல்ஷன் பர்வீன், ஆஃப்ரீன் ரெஹ்மான் போன்றோரும் சட்டத்தை வரவேற்றிருக்கிறார்கள். இவர்களில் மொபைல்போன் வழியே தலாக் செய்யப்பட்ட இஷ்ரத், `என் வாழ்க்கை வீணாகிப்போனது. ஆனால், இனி எந்தப் பெண்ணின் வாழ்க்கையும் வீணாகக்கூடாது. என் போராட்டம் தொடரும்’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முஸ்லிம் பெண்களுக்கு இந்தச் சட்டம் பெரும் நிம்மதியை அளித்திருக்கிறது. துரித தலாக் செய்யும் முஸ்லிம் ஆண்களை இதன்மூலம் மூன்றாண்டுகள் சிறையில் தள்ள முடியும். ஆனால், இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. காரணம், இதிலிருக்கும் சில குறைபாடுகள்தாம். சமூகச் செயற்பாட்டாளரான கவிதா கிருஷ்ணன், `தண்டனை வழங்குவதைவிட இந்தச் சட்டம் ஜீவனாம்சத்தை உறுதி செய்திருந்தாலே போதுமானது’ என்று கூறியுள்ளார்.

`பிணையில் வர இயலாத வகையில் இச்சட்டம் இயற்றப்பட்டிருப்பது முஸ்லிம் ஆண்களின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது. சம்பந்தப்பட்ட கணவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள்’ என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ‘சம்பந்தப்பட்ட பெண் அனுமதி அளித்தால் ஒழிய பிணையை விடுவிக்க இயலாது’ என்பதும் இந்தச் சட்டத்தின் அடிப்படையைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. வரதட்சணை எதிர்ப்புச் சட்டப் பிரிவு 498-ஏ போல இந்தச் சட்டமும் தவறாகப் பயன்படுத்தப்படும் என்கிற அச்சமும் மக்களிடையே நிலவுகிறது.

இவை அனைத்தையும் கவனத்தில்கொண்டு, இந்தச் சட்டத்தின் சிறப்பான நோக்கம் நீர்த்துப் போகாமல் நடைமுறைப்படுத்துவது மிக அவசியம். அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டம் நமக்குத் தந்திருக்கும் உரிமையை எந்த விதத்திலும் இந்தச் சட்டம் தடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.

தங்கள் உரிமையை நிலைநாட்டக் கடுமையாகப் போராடி வென்றிருக்கும் பெண்களுக்கு நம் வாழ்த்துகள்.

நமக்குள்ளே...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism