Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

கொரோனா முடிவுக்கு வர பல வருடங்கள் ஆகலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.

நமக்குள்ளே...

கொரோனா முடிவுக்கு வர பல வருடங்கள் ஆகலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.

Published:Updated:
நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

கொரோனாவோடு வாழப் பழகினோமோ, இல்லையோ... கடந்த ஓராண்டாக நிறைய சவால்களோடு வாழப் பழகிக்கொண்டோம். இந்நிலையில், நாளுக்கு நாள் உச்சம் தொட்டுக்கொண்டிருக்கிறது கொரோனா தாக்குதல். ‘இனிதான் இருக்கிறது இறுதி ஆட்டம்’ என்று எச்சரிக்கின்றன கொரோனா எண்ணிக்கைகள்.

ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் ஏற்படும் மரணங்கள் கலங்கடிக்கின்றன. ‘ஒரு பெட் கிடைக்குமா..?’ என்ற குரல்கள் திசைதோறும் அலைந்துகொண்டிருக்கின்றன. மே, ஜூன் மாதங்களில் தினசரி பாதிப்பு 8 முதல் 9 லட்சத்தைத் தொடலாம் என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

கொரோனா முடிவுக்கு வர பல வருடங்கள் ஆகலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.

நேற்றுவரை பக்கத்தில் நின்று பேசியவருக்கு இன்று கொரோனா பாசிட்டிவ் என்று கேள்விப்படுகிறோம். யாரிடம் பேசினாலும் அவர்கள் குடும்பத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பற்றியாவது தகவல் பகிர்வதைப் பார்க்கிறோம். சுருக்கமாகச் சொன்னால், கடந்த ஆண்டைவிட இந்த வருடம் கொரோனாவுக்கும் நமக்குமான இடைவெளி ரொம்பவே குறைந்துவிட்டது.

நமக்குள்ளே...
நமக்குள்ளே...

‘நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா..?’ - நாம் ஒவ்வொருவரும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது. அதற்கு மனதில் சில அலாரங்கள் வைக்கவேண்டியது அவசியம்.

வேலை, தொழில் என வெளியில் செல்ல வேண்டியவர்கள், மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். போகிற இடத்தில் சானிடைசரை எதிர்பார்க்காமல் உங்கள் கைவசம் சின்ன சானிடைசர் பாட்டிலும் எக்ஸ்ட்ரா மாஸ்க்கும் வைத்துக்கொள்ளுங்கள். எதிரிலிருக்கும் நபர் மாஸ்க் அணியாவிட்டால், ‘மாஸ்க்கை மறந்துட்டீங்கபோல...’ என்று சூசகமாகச் சொல்லுங்கள். அப்படியும் பலனில்லை எனில், வழக்கமான இடைவெளியைவிட இன்னும் சற்று விலகி இருந்து பேசலாம். வெளியே தண்ணீர், காபி, டீ உள்ளிட்டவற்றைத் தவிர்த்துவிடுங்கள். வீடு திரும்பியதும் குளித்துவிடுங்கள். மாஸ்க்கைக் கழற்றி கையோடு துவைத்துவிடுங்கள்/டிஸ்போஸ் செய்துவிடுங்கள். உங்கள் குடும்பத்தாரின் பாதுகாப்பிலும் உங்களுக்குப் பங்கிருப்பதை மறந்துவிடாதீர்கள்.

நம்மில் சிலர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதால், ‘இனிமே நாம சேஃப், பிரச்னையில்ல’ என்ற எண்ணம் இருந்தால், தயவுசெய்து அதை மாற்றிக்கொள்ளுங்கள். தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட் பாசிட்டிவ் ஆகி மருத்துவமனையில் அட்மிட் ஆனவர்கள் நம் கண்முன்னே இருக்கிறார்கள்.

இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கொரோனா வரலாம். அது தீவிரமாகாமலும் இறப்புவரை மோசமடையாமலும் காப்பது மட்டுமே தடுப்பூசியின் வேலை என்பதை நினைவில்கொள்ளுங்கள். அதே வேளையில், இதுவரை தடுப்பூசி போடாதவர்களும் தட்டுப்பாடு அதிகரிப்பதற்குள் போட்டுக்கொள்ளுங்கள். தடுப்பூசி போட்டாலும் எச்சரிக்கையாக இருப்பது மட்டும்தான் நமக்கு முழுமையான பாதுகாப்பைத் தரும்.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பகுதி நேர லாக்டௌன், எப்போது வேண்டுமானாலும் முழு நேரமாக்கப்படலாம். அதை எதிர்கொள்ளும் வகையில் பொருளாதாரத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

கடினமான நாள்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் தோழிகளே. நம்பிக்கை, அன்பு, உதவியைப் பகிர்வோம், பெறுவோம். மீண்டு வருவோம் மீண்டும்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்