சீரான பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பல சீர்திருத்தங்களை மத்திய அரசாங்கம் எல்லாத் துறைகளிலும் செய்துவருகிறது. அந்த வகையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த வரிச் சீர்திருத்தங்களை பிரதமர் நரேந்திர மோடி இப்போது அறிவித்திருக்கிறார்.

‘‘நம் நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருந்தாலும், வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. வரி செலுத்தும் தகுதி கொண்டவர்கள் நாட்டு நலன் கருதி, நேர்மையாகவும் சரியான ஆவணங்களைத் தந்தும் வரி செலுத்த முன்வர வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பிரதமர். வரிதாரர்கள் எளிதாக வரி கட்டவும், வெளிப்படையான முறையில் வரிக் கணக்கு தொடர்பான பரிசீலனைகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

வரி மூலம் கிடைத்துவரும் வருமானம் குறைந்துவரும் நிலையில், வரி செலுத்துவதில் பல மாற்றங்களைக் கொண்டுவந்து, வருமானத்தைப் பெருக்க நினைக்கிறது மத்திய அரசாங்கம். அரசுத் திட்டங்களை நிறைவேற்ற கடன் வாங்காமல், மக்களின் வரி வருமானத்திலிருந்து நிறைவேற்ற நினைப்பதில் தவறேதும் இல்லை. அரசும் தன் பங்குக்கு வரி விகிதங்களைக் குறைத்து வருவதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது.

‘வரி கட்டத் தொடங்கினால், வருமானவரித் துறையின் பலவிதமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்’ என்று பயந்தே சிலர் வரி கட்டாமல் இருக்கின்றனர். இந்த நிலை மாறி, வரிதாரர்கள் எந்த பயமும் இன்றி வரித்துறையினருடன் பழகும் அளவுக்கு சகஜ நிலையை ஏற்படுத்த வேண்டும்.

சம்பாதிக்கும் பணத்துக்கு அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைத் தவறாமல் செலுத்துவது குடிமக்களின் கடமை என்ற எண்ணத்தை அவர்களின் மனதில் உருவாக்க வேண்டும். நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நலத்திட்டங்கள் அனைத்தும் வரி மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்துதான் செய்யப்படுகிறது; சரியாக வரி கட்டாவிட்டால், மக்களுக்கான நலத் திட்டங்களை அரசால் செய்ய முடியாது என்பதை மக்கள் உணர வேண்டும். அதேநேரம், மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் என்ற பந்தாவுடன் மக்களின் வரிப்பணத்தில் செய்யப்படும் தேவையற்ற செலவுகளையெல்லாம் குறைத்துக்கொண்டு முன்னுதாரணமாக நிற்க ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் முன்வர வேண்டும்.

வருமானவரித் துறையினரிடமும் மக்களிடமும் மாற்றங்கள் ஏற்பட்டால், அரசின் கஜானா நிரம்பி வழியும். இதற்கு மத்திய அரசாங்கம் இப்போது கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள் நிச்சயம் உதவும்!

- ஆசிரியர்