கடந்த சில மாதங்களாக உலகையே அச்சுறுத்திவந்த கோவிட்-19 தொற்றுநோய் குறித்த பயத்திலிருந்து நாம் இப்போது மீண்டுவரத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான விஷயம். சென்னையில் மட்டுமன்றி, தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் வார நாள்களில் மக்கள் வெளியே வந்து தங்கள் அன்றாடப் பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள். பல தனியார் அலுவலகங்களும், சரிபாதி அரசு நிறுவனங்களும் பழையபடி மீண்டும் இயங்கத் தொடங்கியிருப்பது நல்ல முன்னேற்றமே.

இந்த நேரத்தில் தமிழக அரசாங்கத்திடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது ஒன்றுதான். அது, வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல், தமிழகம் முழுக்க பஸ்களை இயக்கத் தொடங்குவதற்கான உத்தரவை மாநில அரசாங்கம் பிறப்பிக்க வேண்டும் என்பதே. கோவிட்-19 தொற்றுநோயால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிராவில்கூட மாவட்டங் களுக்கு உள்ளும் மாவட்டங்களைத் தாண்டியும் பஸ்கள் இயங்கத் தொடங்கிவிட்டன. அப்படி இருக்க, நமது மாநில அரசாங்கமும் பஸ்களை இயக்கலாமே!

தற்போது தனியார் மற்றும் அரசு அலுவலக ஊழியர்கள், தனியார் வியாபார நிறுவன ஊழியர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் என்று பலதரப்பட்டவர்களும் பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் பணியிடங்களுக்கு வந்து செல்ல படாதபாடு படுகிறார்கள். கிடைக்கும் சம்பளத்தில் பெரும்பகுதியை ஆட்டோ போன்ற தனியார் வாகனங்களின் கட்டணத்துக்காகவே இவர்கள் செலவழிக்க வேண்டியிருப்பது கொரோனாவைவிடக் கொடுமை. வெளியூர்களுக்குப் பயணப்படுகிறவர்களும் பல ஆயிரம் ரூபாயைச் செலவு செய்தே தனியார் வாகனங்களில் செல்கின்றனர். ஒரு வேனில் 8 முதல் 10 பேர் வரை பயணம் செய்ய அனுமதிக்கிற அரசாங்கம், 50 - 75% பயணிகளுடன் பஸ்களை இயக்க அனுமதிக்கலாமே!

ஊரடங்கு காரணமாகத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து வெளியேறிய பல லட்சம் தொழில் நிறுவனங்களில் 1.5 லட்சம் நிறுவனங்கள் மீண்டும் அதற்குள் வந்து தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியைச் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன. பொருளாதாரம் மீண்டும் முன்னேற்றம் காணத் தொடங்கியிருப்பதையே இது காட்டுகிறது. இந்த முன்னேற்றத்தைத் துரிதப்படுத்த வேண்டுமெனில், தமிழக அரசாங்கமும் பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும்.

பஸ்களை இயக்கத் தொடங்குவதால், தொற்றுநோயை நாம் அலட்சியப் படுத்த வேண்டியதில்லை. அதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்களைப் பின்பற்றச் சொல்லி, பஸ்களை இயக்கத் தொடங்கினால், அரசுக்கு மக்கள் நன்றி தெரிவிக்கவே செய்வார்கள்!

- ஆசிரியர்