Published:Updated:

பொருளாதாரம் வளர மும்முனைக் கூட்டணி..!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

பொருளாதாரம் வளர மும்முனைக் கூட்டணி..!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
‘‘மீண்டும் பொருளாதார வளர்ச்சி வரும். அதைக் கொண்டுவரத் தொழில்முனைவோர்கள் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்’’ என்று அறைகூவல் விடுத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. சி.ஐ.ஐ-யின் 125-வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் இந்த அறைகூவலை விடுத்திருக்கிறார்.

‘‘நம் நாட்டுக்குத் தேவையான குளிர்சாதனப் பெட்டிகளில் 30 சதவிகிதத்தை வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்கிறோம். இனி இந்தியாவிலேயே எல்லாப் பொருள்களையும் உற்பத்தி செய்து, அவற்றை உலகம் முழுக்க ஏற்றுமதி செய்ய வேண்டும்’’ என்று பிரதமர் சொன்னது கொரோனாவால் சுருண்டுகிடந்த இந்தியத் தொழில்துறையை உற்சாகம்கொண்டு எழச் செய்வதாக இருக்கிறது. ஆனால், இன்றைக்கு நாட்டில் அநேகத் தொழில்முனைவோர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னையே போதிய அளவில் நிதி ஆதாரம் கிடைக்காததுதான். ‘‘வங்கிகளிடம் எக்கச்சக்கமாகப் பணம் இருக்கிறது. ஆனால், ‘கடன் வேண்டும் என்று கேட்டு யாரும் வர மாட்டேன் என்கிறார்களே...’ என்று கவலைப்பட்டிருக்கிறார் எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் ரஜனீஷ் குமார். அதாவது, பெரும் தொழில் நிறுவனங்கள் இன்றைக்குக் கடன் வாங்கித் தொழிலை விஸ்தரிக்கத் தயாராக இல்லை. ஆனால், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மேற்கொண்டு தொழில் நடத்தத் தேவையான நிதி இல்லாமல் கஷ்டப்படுகின்றன. இந்த நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் தரத் தயங்குகின்றன. இந்த முரண்பாடுதான் இன்றைய இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிய தடை.

கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கடன் தர ‘சுய சார்பு’த் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கடன் அடுத்த சில மாதங்களுக்குள் தரப்பட வேண்டும். இந்தக் கடனை வங்கிகள் உடனடியாகத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பிரதமர் விடுத்த அறைகூவல் நிஜமாக வாய்ப்பு உருவாகும்.

இந்த விஷயத்தில் வங்கிகளுக்கு இருக்கும் தடைகளைக் கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும். கடன் கேட்பவர்களுக்குத் தருகிற எண்ணம் வங்கி அதிகாரிகளுக்கு வர வேண்டும்; வாங்கிய பணத்தில் தொழிலை விருத்தி செய்து, கிடைக்கும் லாபத்தைக் கொண்டு வங்கிக் கடனை அடைக்கத் தொழில்முனைவோர்கள் அக்கறை காட்ட வேண்டும். இந்த இரண்டும் சரியாக நடந்தால்தான், நம் நாடு மீண்டும் மிகப்பெரிய வளர்ச்சியைக் காணும். இந்த விஷயத்தில் அரசும், வங்கியும், தொழில்முனைவோர்களும் கூட்டணி அமைத்துச் செயல்பட வேண்டியது அவசியம்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism