`கொரோனா பாதிப்பால் முடங்கிக்கிடக்கும் பொருளாதாரம் மீண்டும் வேகமான வளர்ச்சிகாண மத்திய அரசாங்கம் பெரிய அளவில் ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை நிறைவேற்றுவது மாதிரி மத்திய அரசாங்கமும் ரூ.20 லட்சம் கோடிக்கான நிதியுதவித் திட்டங்களைப் படிப்படியாக அறிவித்துவருகிறது.

இந்த நிதியுதவித் திட்டங்கள் குறித்து நியாயமான பல விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்தாலும், கொரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களைக் கைதூக்கிவிட வேண்டும் என்பதை மனதில்கொண்டு, ரூ.3 லட்சம் கோடியைக் கடனாகத் தர வங்கிகளுக்கு மத்திய அரசாங்கம் அறிவுறுத்தியிருக்கிறது. இதன் மூலம் சிறு தொழில் நிறுவனங்களுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ஆனால், இந்தக் கடன் வங்கிகள் மூலமாகவே சிறு தொழில் நிறுவனங்களுக்குச் சென்று சேர வேண்டும். `இப்போதிருக்கும் சூழ்நிலையில், வங்கிகள் ரிஸ்க் எடுத்து கடன் தரத் தயாராக இல்லை எனும்போது அரசின் நோக்கம் எப்படி நிறைவேறும்?’ என்பது முக்கியமான கேள்வி. சிறு தொழில் நிறுவனங்களுக்குக் கடன் தரும் அளவுக்கு வங்கிகளிடம் நிறையவே பணம் இருக்கிறது. வங்கிகள் தொழில் கடன் தர பயந்துதான் ஏறக்குறைய ரூ.8 லட்சம் கோடிக்குமேல் ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்துவைத்திருக்கின்றன. இந்த நிலையில், இந்த ரூ.3 லட்சம் கோடியில் எவ்வளவு தொகையை சிறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் தருமோ?!

ஒரு தொழில் நிறுவனம் கடன் கேட்டு வங்கியை அணுகும்போது, அதற்குக் கடன் தருவதால் அந்த வங்கி என்னென்ன சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை ஆய்வு செய்து முடிவெடுக்கக்கூடிய வகையில் அறிவியல்பூர்வமான அணுகுமுறைகளும் வழிமுறைகளும் வங்கி மேலாளர்களுக்குக் கற்றுத் தரப்பட வேண்டும். இது தொடர்பாக உலக அளவில் பின்பற்றப்படும் அணுகுமுறைகளை நம் நாட்டுக்குக் கொண்டுவருவதுடன், ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தீர்வுகாண முற்பட வேண்டும். வங்கி மேலாளர்களும் தங்கள்மீது பழி வந்துவிடுமோ என்று நினைத்து தங்கள் கடமையைச் செய்யாமல் தட்டிக் கழிப்பதாலும், புதியவர்களைத் தவிர்த்துவிட்டு ஏற்கெனவே கடன் தந்தவர்களுக்கே மேலும் கடன் தருவதாலும் எந்த நன்மையும் இல்லை என்பதை உணர வேண்டும்.

பொருளாதார முன்னேற்றத்துக்கான வழிகளை அரசாங்கம் ஏற்படுத்தித் தந்தால் மட்டும் போதாது; அந்த வழிகளில் இருக்கும் தடைகளை அகற்றித் தரும் கடமையும் அதற்கு இருக்கிறது. மாற்றம் செய்யாமல் முன்னேற்றம் காண முடியாது என்பதைப் புரிந்துகொண்டு இனியாவது அந்த வேலைகளைச் செய்ய மத்திய அரசாங்கம் முன்வர வேண்டும்!

- ஆசிரியர்