Published:Updated:

ஒழிக்கப்பட வேண்டிய ஆன்லைன் சூதாட்டம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

ஒழிக்கப்பட வேண்டிய ஆன்லைன் சூதாட்டம்!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
மிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் மரணங்கள் தொடர்கதை யாகிவிட்டன. தர்மபுரி மாவட்டம் அண்ணா நகரைச் சேர்ந்த வெங்கடேஷ், ஆன்லைன் சூதாட்டத்தில் தற்போது பலியாகியிருக்கிறார். இவர் சாதாரண மனிதரல்ல; தமிழ்நாடு காவல் படையில் பணியாற்றும் போலீஸ்காரர். மக்களைப் பாதுகாக்க வேண்டிய ஒரு போலீஸ்காரரே இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகிப் போயிருக்கிறார் என்பது வேதனை தரும் உண்மை. ஆனால், இந்தச் செய்திகளை எல்லாம் படிக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆன்லைன் சூதாட்டத்தை, தமிழகத்திலிருந்து நிரந்தரமாக ஒழித்துக்கட்ட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.

கோவிட்-19 தமிழகத்தில் நுழைந்த பிறகு, கடந்த ஆறேழு மாதங்களாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. போதிய அளவு வேலை கிடைப்பதில்லை; வேலை கிடைத்தாலும் நல்ல வருமானம் கிடைப்பதில்லை. இந்த நிலையில், கூடுதலான வருமானத்தைப் பெறலாம் என்ற ஆசையில் ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி, பலரும் பணத்தையும் உயிரையும் இழக்கிறார்கள்.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்கவே இந்தக் கொடுமை நடக்கவே செய்கிறது. இந்தச் சம்பவங்களைப் பார்த்த சில மாநில அரசாங்கங்கள் ஆன்லைன் சூதாட்டம் தங்கள் மாநிலங்களில் அறவே நடக்கக் கூடாது எனச் சட்டங்களை மாற்றி வருகின்றன. அப்படி சட்டங்களை மாற்றிய மாநிலங்களின் பட்டியலில் சமீபத்தில் ஆந்திர மாநிலம் சேர்ந்திருக்கிறது. அந்த மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை நடத்தினால் சிறைத்தண்டனை அளிக்கும் வகையில் சட்டவிதிகள் மாற்றப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தைப்போல, தமிழக அரசாங்கமும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆன்லைன் சூதாட்டம் மட்டுமல்ல, இந்திய அரசால் எந்த வகையிலும் அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் கரன்சியான பிட்காயின்களை வாங்கியும் பலர் தங்கள் பணத்தை இழக்கிறார்கள். மிக அதிகமான லாபத்தைத் தருவதாகச் சொல்லி, அப்பாவி மக்களை ஏமாற்றும் மோசடி ‘பொன்சி’ (Ponzi) திட்டங்களிலும் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தைப் போட்டு, இழக்கிறார்கள். இவற்றையெல்லாம் உடனுக்குடன் தடுத்து நிறுத்த வேண்டிய பொருளாதாரக் குற்றப்பிரிவு என்னதான் செய்துகொண்டிருக்கிறது என்பது தமிழக முதல்வருக்குத் தெரியுமா?

பேராசை காரணமாக மக்கள்தாம் இதுமாதிரியான திட்டங்களைத் தேடிச் சென்று விழுகிறார்கள் என்பது நிஜம் என்றாலும், இந்த மோசடித் திட்டங்களை நடத்தும் ஏமாற்றுக்காரர்களை ஒழித்துக்கட்ட வேண்டியது அரசின் கடமை இல்லையா? வருமானம் வந்தால் போதும் என டாஸ்மாக் கடைகளை நடத்துகிற மாதிரி, ஆன்லைன் சூதாட்டத்தையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறதா? இனியும் அப்படி இருந்தால், மக்களின் ஆதரவை இழக்க வேண்டியிருக்கும் என்பது நிச்சயம்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism