Published:Updated:

பெருகட்டும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

பெருகட்டும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
லக அளவில் நமது நாடு பொருளாதார வளர்ச்சியில் சிறப்பான இடத்தைப் பெற்று வருகிறது என்பதற்கு இன்னும் ஓர் ஆதாரம் இப்போது வெளிவந்திருக்கிறது. ஆன்லைன்மூலம் அதிகளவில் பணப் பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் உலகிலேயே முதலிடத்தை அடைந்திருக்கிறது நம் இந்தியா.

உலகளவில் ஆன்லைன்மூலமான பணப் பரிமாற்றம் குறித்து ஆய்வறிக்கை வெளியிடும் ஃபிஸ்குளோபல் (FisGlobal) நிறுவனம், தனது சமீபத்திய அறிக்கையைத் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, நம் நாட்டில் நாளொன்றுக்கு 4.1 கோடி என்ற எண்ணிக்கையில் பணப் பரிவர்த்தனை நடக்கிறது. நம்மைவிட மக்கள் தொகை அதிகமாக இருக்கும் சீனாவில் ஒரு நாளைக்கு 3.8 கோடி என்ற எண்ணிக்கையில்தான் பணப் பரிவர்த்தனை நடக்கிறது. அது மட்டுமல்லாமல், பரிவர்த்தனையாகும் பணத்தின் மதிப்பும் கடந்த ஆண்டைவிட 80% அதிகரித்துள்ளது.

ஆன்லைன் பணப் பரிமாற்றமானது கடந்த பல ஆண்டுகளாக இருந்தாலும், 2016-ல் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகே வேகமெடுக்கத் தொடங்கின. இதன் பிறகு, வந்த யு.பி.ஐ தொழில்நுட்பமானது, ஆன்லைன் மூலமான பணப் பரிமாற்றத்தை இன்னும் இலகுவாக்கி, எல்லோரும் செய்யும் வகையில் மாற்றி அமைத்தது.

ஆன்லைன்மூலமான பணப் பரிவர்த்தனையில் நம்பர் ஒன் நாடாக நம் நாடு உயர்ந்திருந்தாலும், இதை இன்னும் அதிகமான மக்கள் பயன்படுத்துகிற அளவுக்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகியிருக்கிறது. ஆன்லைன் மூலமான பணப் பரிவர்த்தனையை இன்னும் எந்தெந்த இடங்களில் எல்லாம் கொண்டு வர முடியுமோ, அங்கெல்லாம் கொண்டு வருவதன்மூலம் ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைக்க முடியும். உதாரணமாக, 10,000 ரூபாய்க்குமேல் பணம் தர வேண்டுமெனில், அதை ஆன்லைன் மூலமாகவே தர வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசாங்கம் கொண்டு வரலாம். சிறிய அளவிலான தொகையைக்கூட ஆன்லைன்மூலம் பரிவர்த்தனை செய்யும்படி வர்த்தகர்களை ஊக்குவிக்கலாம். வர்த்தகர்கள் இந்தச் சேவையைத் தரும்பட்சத்தில் மக்கள் எளிதில் ரொக்கத்தை விட்டுவிட்டு, ஆன்லைனுக்கு மாறுவார்கள்.

இதனால் வரி ஏய்ப்பு குறையும் என்பது அரசுக்குக் கிடைக்கும் நன்மை. ரொக்கத்தைக் கையாள்வது, சில்லறைத் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பது, எல்லாக் கணக்குகளும் ஒரே இடத்தில் இருப்பது என வர்த்தகர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் பல. பணத்தைப் பத்திரமாக வைத்திருந்து செலவு செய்வது, சில்லறைத் தட்டுப்பாடு, கிழிந்த நோட்டு பிரச்னை எதுவும் இல்லாமல் மக்களும் நிம்மதியாக இருக்கலாம். பொருளாதாரரீதியில் நாம் முன்னேற வேண்டுமெனில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நாம் தயங்கக் கூடாது. ஆன்லைன்மூலமான பணப் பரிவர்த்தனையை அதிகரிக்க அரசும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு, நம் நாடு முன்னேற்றம் காணட்டும்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism