பிரீமியம் ஸ்டோரி

பயணம் என்று சொல்லும்போதே நம் நினைவுக்கு வருவது பாதுகாப்பு. அந்த வகையில் பாதுகாப்புக்கு ஏற்ற கார்களைத் தயாரிப்பதில் நாம் இப்போது வேகமாக முன்னேறி வருகிறோம். அதற்குச் சமீபத்திய உதாரணம் - அடல்ட் ஆக்குப்பன்ஸியில் 5 ஸ்டாரும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் வாங்கியிருக்கும் டாடா பஞ்ச்.

`பாதுகாப்பு என்றால் டாடா, டாடா என்றால் பாதுகாப்பு' என்று மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற முனைப்போடு, அந்நிறுவனம் எடுத்து வரும் முயற்சிகள் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே டாடாவின் அல்ட்ராஸ், அடல்ட் ஆக்குப்பன்ஸியில் 5 ஸ்டாரும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டாரும் பெற்றிருக்கின்றன. அதேபோல டாடாவின் நெக்ஸானுக்கு 5 ஸ்டார் ரேட்டிங்; டாடா டியாகோ மற்றும் டிகோருக்கு 4 ஸ்டார் ரேட்டிங் என டாடா இப்போது பாதுகாப்பின் அடுத்த கட்டத்தில் இருக்கிறது.

பாதுகாப்பு விஷயத்தில் டாடாவோடு போட்டி போடும் இன்னொரு கம்பெனியும் இந்தியக் கம்பெனி என்பது பெருமைக்குரிய விஷயம். ஆம், டாடாவோடு போட்டி போடும் மஹிந்திராவின் XUV 300-வும் அடல்ட் ஆக்குப்பன்ஸியில் 5 ஸ்டாரும், குழந்தைகள் பாதுகாப்பில் 4 ஸ்டாரும் வாங்கியிருக்கிறது. மஹிந்திராவின் மராத்ஸோவும் இந்தக் குறியீடுகளில் முறையே 4 மற்றும் 2 ஸ்டார்கள் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்த முன்னெடுப்பே! மஹிந்திராவின் தார் இந்த இரண்டு குறியீடுகளிலும் சமீபத்தில்தான் 4 ஸ்டார்கள் பெற்றன என்பதும் பெருமைக்குரிய சாதனையே!

இந்த வரிசையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா எட்டியோஸ், ரெனோ ட்ரைபர் ஆகிய கார்களும் பாதுகாப்புக்கான கார்கள் என்று Global NCAP - ஆல் அடையாளப்படுத்தப்பட்டிருப்பது நமது வலிமையையும் திறமையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவி செய்திருக்கின்றன. அத்துடன், மக்கள் பாதுகாப்போடு பயணம் செய்ய பாதையும் போட்டுக் கொடுத்திருக்கின்றன.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு