Published:Updated:

எதற்காக இந்த ரகசியம்?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

புதிய கல்விக்கொள்கை வரைவு முன்வைக்கப்பட்டபோது முதல் விமர்சனக்குரல் தமிழகத்திலிருந்தே எழுந்தது.

எதற்காக இந்த ரகசியம்?

புதிய கல்விக்கொள்கை வரைவு முன்வைக்கப்பட்டபோது முதல் விமர்சனக்குரல் தமிழகத்திலிருந்தே எழுந்தது.

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

‘மும்மொழிக்கொள்கை’ என்பது இந்தித் திணிப்பையே ஊக்குவிக்கும் என்று எதிர்ப்பு எழுந்தபிறகு, வரைவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், ‘புதிய கல்விக்கொள்கை குறித்துப் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க ஒரு மாதம் அவகாசம்’ என்பதும், எதிர்ப்புகளின் காரணமாக இரண்டு மாதங்களாக நீட்டிக்கப்பட்டது.

புதிய கல்விக்கொள்கை குறித்து எதிரும் புதிருமாக மாறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ‘பிரதமர் தலைமையிலான தேசியக் கல்வி ஆணையம்தான் கல்வி தொடர்பான முடிவுகளைத் தீர்மானிக்கும் என்பது மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடும் முயற்சி’, ‘அரசுப்பள்ளிகளை மூடும் நோக்கம் கொண்டது’, ‘கல்வியில் தனியார்மயத்தை ஊக்குவிக்கும்’, ‘மூன்றாம் வகுப்பிலிருந்தே தேர்வு என்பது குழந்தைகளின் கல்வியை பாதிக்கும்’, ‘எல்லாவற்றுக்கும் நுழைவுத்தேர்வு என்பது தனியார் பயிற்சி மையங்களையே வளர்க்கும்’ என்று கடுமையான விமர்சனங்கள் ஒருபுறம் முன்வைக்கப்பட்டன. இன்னொருபுறம், ‘இது வேண்டுமென்றே உள்நோக்கம் கற்பிக்கும் முயற்சி’, ‘தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு அல்லது மிகைப்படுத்தப்பட்டு வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்’, ‘மூன்றாம் வகுப்பிலேயே தேர்வு என்று சொல்லவில்லை; மதிப்பீடு என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது’ என்று எதிர்க்கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இத்தகைய விவாதங்கள் எல்லாம் கல்வியாளர்கள் மத்தியிலும் அரசியல்சார்பு கொண்டவர்கள் மத்தியிலும்தான் நடந்தனவே தவிர, மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் நடைபெறவில்லை. ஆனால் அதுதான் முக்கியம். ஏனெனில், அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் கல்விக்கொள்கை இது. பெற்றோர்கள் மத்தியில் இந்த உரையாடல்கள் தொடங்க வேண்டும் என்றால், அதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டியது மாநில அரசுகள்தான்.

ஆனால் தமிழக அரசோ, புதிய கல்விக்கொள்கை குறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டங்களை முறையாக நடத்தவில்லை. கோவையில் ‘பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம்’ என்ற பெயரில் சில அதிகாரிகளே கூடிப்பேசியதை, அந்த அரங்கத்திற்குள் நுழைந்து தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை.ராமகிருஷ்ணன் கேள்விகேட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதேபோல் சென்னை ஐ.ஐ.டி-யிலும் ரகசியமாகக் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டதும் அம்பலமானது.

பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தில் புதிய கல்விக்கொள்கையின் தமிழாக்கம் உள்ளது. ஆனால், தன்னார்வலர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பதிப்பகமான ‘பாரதி புத்தகாலயம்’ வெளியிட்ட நூல்தான் அது. தகுந்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு புதிய கல்விக்கொள்கையை மொழிபெயர்க்கக்கூடத் தமிழக அரசால் முடியாதா? மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கல்விக்கொள்கை பற்றி எதற்காக ரகசியக்கூட்டங்கள்?

ஏற்கெனவே எட்டுவழிச்சாலை போன்ற வளர்ச்சித் திட்டங்களில் மக்களை அணுகுவதில் தவறிழைத்த தமிழக அரசு, இந்த விஷயத்திலும் மீண்டும் தவறிழைத்திருக்கிறது. எப்போதுதான் பாடம் கற்கும் எடப்பாடி அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism