Published:Updated:

அறம்!

பசுமை வணக்கம்
பிரீமியம் ஸ்டோரி
பசுமை வணக்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

அறம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

Published:Updated:
பசுமை வணக்கம்
பிரீமியம் ஸ்டோரி
பசுமை வணக்கம்

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’

அதாவது, ‘அரசியலில் தவறு செய்வோரை அறமானது எமன்போல வந்து அழித்துவிடும்’ என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சிலப்பதிகாரம் சொல்கிறது. இதுதான், இப்போது டெல்லியிலும் நடந்துகொண்டிருக்கிறது. ஆம், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, ‘‘குஜராத்தைப் பாருங்கள்; பாலாறும் தேனாறும் ஓடுகிறது; விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் வளமாக வாழ்வார்கள்’’ என்றெல்லாம் மூச்சுக்கு முந்நூறு தடவை முழங்கித்தான் பிரதமர் நாற்காலியைப் பிடித்தார் நரேந்திர மோடி.

ஆனால், ஆட்சிக்கு வந்து ஏழாண்டுகள் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், தற்போது இந்திய விவசாயிகளின் கோபத்துக்கு ஆளாகி நிற்கிறார். “குஜராத் மாடல் என்கிற பெயரில் ஒட்டுமொத்த இந்திய விவசாயத்தையும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கைகளில் ஒப்படைக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார். இதற்காகவே கொரோனா சூழலில் சத்தமில்லாமல், மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினர். அந்தச் சட்டங்களை வாபஸ் வாங்கும்வரை ஓயமாட்டோம்’’ என்று டெல்லியை முற்றுகையிட்டு முழங்கிக் கொண்டுள்ளனர் விவசாயிகள்.

வீடு, வாசல், தோட்டம் துரவு, சொந்த பந்தங்களையெல்லாம் விட்டுவிட்டு, கடும்குளிரில் போராடுபவர்களை, மத்திய அரசு மனமிரங்கி மனிதநேயத்துடன் பார்க்க வேண்டும்.

இந்தச் சட்டங்கள் மூலம் நன்மைகள் கிடைக்கப்போகின்றன என்றால், இவ்வளவு விவசாயிகள் ஏன் எதிர்க்கப்போகிறார்கள்?

‘‘அரசியல் கட்சிகள் தூண்டிவிடுகிறார்கள். அந்நிய நாடுகளிலிருந்து ஆதரவு கொடுக்கிறார்கள்’’ என்று சொல்லி வழக்கமான அரசியல் போராட்டமாக இதைப் பார்க்காதீர்கள். இது நாட்டுக்கே சோறு போடும் விவசாயிகளின் பிரச்னை. நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து, இப்படி ஒரு போராட்டத்தை இந்தியா பார்த்ததில்லை. போராட்டம் நடக்கும் ஒவ்வொரு நாளும், ஆளும் அரசுக்குத்தான் தலைகுனிவை ஏற்படுத்தும். ஆகையால், இனியும் தாமதம் செய்யாமல், பிரச்னையை முடித்து வைத்து நல்ல தீர்வு சொல்லுங்கள்.

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism