Published:Updated:

தீ அணையட்டும்!

தீ அணையட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
தீ அணையட்டும்!

கண்காணாத தூரத்தில் இருக்கும் சிறு நகரில் வசிக்கும் மக்களின் நிலையை யோசித்துப் பார்க்கவே உடல் நடுங்குகிறது.

தீ அணையட்டும்!

கண்காணாத தூரத்தில் இருக்கும் சிறு நகரில் வசிக்கும் மக்களின் நிலையை யோசித்துப் பார்க்கவே உடல் நடுங்குகிறது.

Published:Updated:
தீ அணையட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
தீ அணையட்டும்!

டெல்லியில் கடந்த வாரம், தொடர்ச்சியாக மூன்று நாள்கள் நடைபெற்ற கலவரத்தில், நாற்பதுக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியானதையும், அதைவிடப் பல மடங்கு பேர் படுகாயமடைந்ததையும் பார்த்துத் தலைநகரம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமும் தலைகுனிந்து நிற்கிறது.

பிரதமர் தொடங்கி முப்படைகளின் தளபதிவரை அத்தனை அதிகார மையங்களும் குவிந்திருக்கும் டெல்லி மாநகரிலேயே, இப்படி ஒரு வெறியாட்டத்தைக் காவல்துறையைச் சாட்சியாக வைத்துக்கொண்டே கலவரக்காரர்களால் அரங்கேற்ற முடியும் என்றால், அதுவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வந்திருப்பதையும் பொருட்படுத்தாது கலவரக்காரர்களால் இப்படியொரு வெறியாட்டம் ஆடமுடியும் என்றால்... கண்காணாத தூரத்தில் இருக்கும் சிறு நகரில் வசிக்கும் மக்களின் நிலையை யோசித்துப் பார்க்கவே உடல் நடுங்குகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த எண்பது நாள்களுக்கு மேலாக மக்கள் ஒன்றுகூடிக் குரல் எழுப்பிப் போராடியபோது எந்தக் கலவரமும் நடைபெறவில்லை. ஆனால் போராட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டபோதுதான் வன்முறை பெரிய அளவில் வெடித்திருக்கிறது. இதற்கு முன்பே டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் காவல்துறையின் அத்துமீறலும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கும்பல் தாக்குதலும், வன்முறையை விதைக்கும் பா.ஜ.க அமைச்சர்கள் மற்றும் எம்.பி-களின் பேச்சுகளும், தனிமனித துப்பாக்கிச்சூடு வன்முறைகளும் தொடங்கியபோதே இதற்கான விதை விதைக்கப்பட்டுவிட்டது.

தீ அணையட்டும்!

பாரதிய ஜனதா கட்சியினர் சொல்வதைப்போல இந்தக் கலவரங்களுக்கும் உயிர் இழப்புகளுக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் காரணமா, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்ட ஒரு சிலர் எதிர்த்தரப்பினரை வீதிகளில் ஓடவிட்டுத் துரத்தித் தரத்தி அடித்தபோதும், அவர்கள் வாழும் பகுதிகளுக்குத் தீவைத்தபோதும், அவை எதையும் கண்டுகொள்ளாத காவல்துறை காரணமா, ‘`தேசத் துரோகிகளைச் சுட்டுத்தள்ளுங்கள்’’ என்று தங்கள் கட்சியினரை உசுப்பிவிட்ட மத்திய மந்திரியும், எம்.பி-களும் காரணமா, நீதிமன்றம் தலையிடும்வரை கலவரக்காரர்களுக்கு எதிராக ஒரே ஒரு முதல் தகவல் அறிக்கையைக்கூடப் பதிவுசெய்யாமல் இருந்த அரசு நிர்வாகம் காரணமா, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுகிறவர்களின் தரப்பு வாதம்தான் என்ன என்பதைக் காதுகொடுத்துக்கூடக் கேட்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் மத்திய அரசு காரணமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும். இந்த நாட்டில் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றால் அவை எப்படிக் கையாளப்படும் என்பதை டெல்லி கலவரம் மீண்டும் ஒரு முறை உறுதி செய்திருக்கிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும் ஜல்லிக்கட்டு எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும் அது வன்முறையில் முடிவதற்குப் பின்னால் இருக்கும் நோக்கங்கள் என்ன என்கிற கேள்வி எழுகிறது.

போராட்டங்களை அச்சுறுத்தி ஒடுக்கிவிட்டாலும் நாட்டில் ஒரு பகுதியினரை நிரந்தர அச்சத்தில் ஆழ்த்திவிட்டு நடைபெறும் எந்த நிர்வாகமும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் நிம்மதியைத் தராது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism