-கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கும் புத்தம் புதிய அறிவிப்பு இது.

‘அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் என்று உலகின் முன்னணி நாடுகள் பலவற்றிலும் CDS எனப்படும் முப்படைத்தளபதி என்ற அதிகார முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர் இருக்கிறார்.’ ‘இது, கார்கில் யுத்தத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட நிபுணர்குழு பரிந்துரைத்த விஷயம்தான்’ - `முப்படைகளுக்கும் சேர்த்து ஒரு தலைமைத்தளபதி பதவி ஏன்?’ என்பதற்கு பிரதமர் தொடங்கி அதிகாரிகள்வரை பலரும் இப்படி விளக்கங்களைக் கொடுத்துவிட்டார்கள். அரசின் இந்த முடிவுக்கும் வழக்கம்போலக் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. ‘ராணுவத்தின் முழுக்கட்டுப்பாடும் ஒருவருடைய கையிலிருந்தால் என்னவாகும் என்பதற்கு அக்கம்பக்கத்து நாடுகளில் கடந்த எழுபது ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் துயரமான சம்பவங்களே சாட்சி. அதிகாரக்குவிப்பு என்பது சர்வாதிகாரத்துக்குத்தான் அடித்தளம் அமைக்கும்’ என்று பலரும் அச்சத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.

அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிவதால் ஏற்படும் ஆபத்தை அறியாதவர்கள் அல்லர் நாம். குறிப்பாக, இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் ‘நெருக்கடி நிலை’ என்கிற பெயரில் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன்வசப்படுத்திக் கொண்டு அவர் நடத்திய காட்டாட்சியை யாரும் மறந்துவிட முடியாது. அதற்கு எதிராகத் திரண்டவர்களில் ஒரு பிரிவு அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சிதான் இன்றைய பி.ஜே.பி என்பதே வரலாற்றுண்மை. நெருக்கடி நிலை தந்த வலிகளை நன்கு உணர்ந்தவர்களில் மோடியும் ஒருவர். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதன் 40ஆம் ஆண்டு (2017) நினைவு நாளின்போது, அந்தக் கொடுமைகளையெல்லாம் மாய்ந்து மாய்ந்து மேடைகளில் முழங்கியவரும்கூட!

அதிகாரப் பரவலுக்காகத்தான் மாவட்டங்கள், மாநிலங்கள் எனப் பலவற்றையும் இரண்டாக, மூன்றாகப் பிரித்துக்கொண்டிருக்கிறோம். கிராமப் பஞ்சாயத்துகள் வரை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து பேசிவருகிறோம். இவற்றுக்கெல்லாம் காரணம், ‘அதிகாரப் பரவல்தான் ஜனநாயகத்துக்கான அடித்தளம்’ என்பதை நாம் நன்கு உணர்ந்திருப்பதுதான்.

உணவு, உடை, பண்டிகைகள் என்று ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வோர் அடையாளம் இருந்தாலும், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக சகோதரத்துவத்துடன் மக்கள் வாழும் பூமிதான் இந்தியா. இது சர்வாதிகார பூமியாக மாறிவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எல்லோரையும்விட பிரதமர் மோடிக்கு அதிகமாகவே இருக்கிறது!