தரமான மருத்துவத் தகவல்கள், நோய்கள் குறித்த விளக்கங்கள் மற்றும் தீர்வுகள், மருத்துவச் சிகிச்சையில் வாசகர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான விளக்கங்கள்... என நவீன மருத்துவ உலகின் அத்தனை அம்சங்களையும் சுமந்தபடி மாதமிருமுறை உங்களோடு உறவாடிக்கொண்டிருக்கிறது டாக்டர் விகடன்.

காலத்தின் இயல்பு, மாற்றங்களைக் கோருவது; புதிய வெளிகளை நாடுவது. அந்த வகையில், இன்றைய உலகத்தை நம்முடன் மேலும் நெருக்கமாக்கியிருக்கிறது டிஜிட்டல் யுகத்தின் மின்னணுப் புரட்சி. ஊடகத்தின் பல பரிமாணங்களையும் இன்னும் உணர்வுபூர்வமாக நம்மை உணரவைத்துக்கொண்டிருக்கிறது இணையப் புரட்சி. ஆம், அச்சு வடிவம் மட்டுமே ஊடகம் என்றிருந்தது மாறி... சமூக ஊடகம், காட்சி ஊடகம் என்று பல்வேறு வாசல்கள் திறக்கப்பட்டுவிட்டன. ஒவ்வொரு நொடியிலும் நாம் இணைந்திருப்பதற்கும், அந்தந்த நொடியே நாம் விவாதிப்பதற்கும், தரவுகளைப் பெறுவதற்கும், பயன்படுத்துவதற்கும், தாம் பெற்ற பலனை பிறர்க்குப் பகிர்வதற்கும் நிறையவே வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இத்தகைய சூழலில், ‘டாக்டர் விகடன்‘ அச்சுப்பிரதி மட்டும் இந்த இதழோடு விடைபெறுகிறது. அதேசமயம், விகடன் குழுமத்தின் பிற இதழ்கள், விகடனின் இணையதளம், விகடனின் சமூக ஊடகங்கள், விகடன் வெப் டி.வி., நேரடியான நிகழ்ச்சிகள், பயிற்சி வகுப்புகள் எனப் பற்பல வடிவங்களில் என்றும்போல் தனது பணியை ‘டாக்டர் விகடன்’ சிறப்பாகத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்.

எங்கள் பணியை உற்சாகமாகத் தொடர்வதற்கு ஊக்கமளித்துக் கொண்டிருக்கும் வாசகர்கள், மருத்துவர்கள், மருத்துவத்துறை சார்ந்த வல்லுநர்கள், விளம்பரதாரர்கள், விகடன் முகவர்கள் அனைவருக்கும் நன்றி.

இதே உற்சாகம் என்றென்றும் தொடர இணைந்திருப்போம் இணையத்தில்!

குறிப்பு: அச்சுப்பிரதியைப் (பிரின்ட் காப்பி) பெற சந்தா செலுத்தியிருக்கும் வாசகர்கள் விரும்பினால் விகடன் குழுமத்திலிருந்து வெளியாகும் பிற இதழ்களுக்கோ, விகடன் இணையதளத்துக்கோ தங்களின் சந்தாவை மாற்றிக்கொள்ளலாம். பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், மீதத்தொகை விரைவில் அனுப்பிவைக்கப்படும். இது தொடர்பாக சந்தாதாரர்களுக்கு தனியாகக் கடிதம் அனுப்பிவைக்கப்படும்.

தொடர்புக்கு,

இமெயில்: refund@vikatan.com

தொலைபேசி: 044-6607 6407, 044-6680 8080