Published:Updated:

வணக்கம் சுட்டி நண்பர்களே!

சுட்டி விகடன்

மாதமிருமுறை வெளியாகிவந்த ‘சுட்டி விகடன்,’ இந்த இதழோடு விடைபெறுகிறது.

வணக்கம் சுட்டி நண்பர்களே!

மாதமிருமுறை வெளியாகிவந்த ‘சுட்டி விகடன்,’ இந்த இதழோடு விடைபெறுகிறது.

Published:Updated:
சுட்டி விகடன்

வணக்கம் சுட்டி நண்பர்களே!

ங்களின் சுட்டி விகடன், கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழ்ச் சுட்டிகளை மகிழ்வித்தும் மெருகேற்றியும் வந்துகொண்டிருக்கிறது. சுட்டிகளின் கற்பனைத்திறனை மேம்படுத்துவதற்கான பலவிதமான பயிற்சிகள், பொது அறிவை வளர்த்தெடுப்பதற்கான பல போட்டிகள் என்று பல்வேறு வகைகளிலும் உங்களோடு கலந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. உங்களிடமிருந்தே நிறைய கற்றுக்கொண்டு, பிற சுட்டிகளுக்கு பகிர்ந்தும்வருகிறது. இன்று பல்வேறு துறைகளில் ஜொலித்துக்கொண்டிருக்கும் பல இளைஞர்கள், சுட்டி விகடனின் அந்நாளைய வாசகர்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்.

இதழ் வாயிலாக மட்டுமே என்றிருந்த நம்முடைய பிணைப்பு, இந்த டிஜிட்டல் யுகத்தில் இன்னும் பல தளங்களுக்கும் விரிவாகியிருக்கிறது. இந்த மின்னணுப் புரட்சியை உடனுக்குடன் உணர்வதில் முந்திக்கொண்டிருப்பது இன்றைய சுட்டிகள்தான். இந்த மின்னணுப் புரட்சி, ஊடகத்தின் பல பரிமாணங்களையும் இன்னும் உணர்வுபூர்வமாக நம்மை உணரவைத்துக்கொண்டிருக்கிறது இணையத்தின் வாயிலாக. ஆம், அச்சு வடிவம் மட்டுமே ஊடகம் என்றிருந்தது மாறி, சமூக ஊடகம், காட்சி ஊடகம் என்று பல்வேறு வாசல்களும் திறக்கப்பட்டுவிட்டன. ஒவ்வொரு நொடியிலும் நாம் இணைந்திருப்பதற்கும், அந்தந்த நொடியே நாம் விவாதிப்பதற்கும், தரவுகளைப் பெறுவதற்கும், பயன்படுத்துவதற்கும், நாம் பெற்ற பலனை பிற சுட்டிகளோடு பகிர்வதற்கும் நிறையவே வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இத்தகைய சூழலில், மாதமிருமுறை வெளியாகிவந்த ‘சுட்டி விகடன்,’ இந்த இதழோடு விடைபெறுகிறது. அதே சமயம், KYD (உங்கள் ஊரைத் தெரியுமா?) சிறப்பிதழ், சுட்டி க்ரியேஷன்ஸ் சிறப்பிதழ், சிறப்புத் தொகுப்பிதழ் எனப் பலவடிவங்களில் உங்களின் பள்ளிக்கூடங்கள் மற்றும் வீடுகளை நேரடியாகத் தேடிவரும்! சுட்டிகளுக்காகவே நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ‘உங்கள் ஊரைத் தெரியுமா?’ போன்ற சிறப்பு பொதுத்தேர்வுகளும், சுட்டிகளின் எதிர்காலக் கல்வி மற்றும் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான புதுவிதமான முயற்சிகளும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

விகடன் குழுமத்தின் பிற இதழ்கள், விகடனின் இணையதளம், விகடன் வெப் டி.வி., விகடனின் சமூக வலைதளங்கள் மற்றும் விகடன் சார்பில் நடத்தப்படும் பயிற்சிகள்/நிகழ்ச்சிகள் என்று பலவற்றின் வாயிலாகவும் சுட்டிகளுக்கான பகிர்தல் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

சுட்டிகளின் சிறப்பான செயல்பாடுகள் மீதான விகடனின் அக்கறைக்கு மதிப்புக் கொடுத்து ஆதரவளித்துவரும் சுட்டிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறையினர், கல்வியியல் வல்லுநர்கள், ஓவியர்கள், சமூக ஆர்வலர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி! இந்த ஆதரவு எப்போதும் தொடர வேண்டுகிறோம். என்றென்றும் இணைந்திருப்போம்!

- ஆசிரியர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பு: சுட்டி விகடன் அச்சுப்பிரதியைப் (பிரின்ட் காப்பி) பெற சந்தா செலுத்தியிருக்கும் வாசகர்கள் விரும்பினால், விகடன் குழுமத்திலிருந்து வெளியாகும் பிற இதழ்களுக்கோ, விகடன் இணையதளத்துக்கோ தங்களின் சந்தாவை மாற்றிக்கொள்ளலாம். பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், மீதித் தொகை விரைவில் அனுப்பிவைக்கப்படும். இது தொடர்பாக சந்தாதாரர்களுக்கு தனியாகக் கடிதம் அனுப்பிவைக்கப்படும்.

தொடர்புக்கு: 044-6607 6407, 6680 8080

இமெயில்: refund@vikatan.com.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism