Published:Updated:

தனித்திரு... இணைந்திரு... விழித்திரு!

தனித்திரு... இணைந்திரு... விழித்திரு!
பிரீமியம் ஸ்டோரி
தனித்திரு... இணைந்திரு... விழித்திரு!

தலையங்கம்

தனித்திரு... இணைந்திரு... விழித்திரு!

தலையங்கம்

Published:Updated:
தனித்திரு... இணைந்திரு... விழித்திரு!
பிரீமியம் ஸ்டோரி
தனித்திரு... இணைந்திரு... விழித்திரு!

`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்', `யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று ஒட்டுமொத்த உலகமும் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகளைப் பலநூற்றாண்டுகளுக்கு முன் சொன்னவர்கள் தமிழர்கள். கொரோனா அபாயம் உலகைச் சூழ்ந்திருக்கும் நிலையில் இன்று ஒட்டுமொத்த உலகமும் கடைப்பிடிக்க வேண்டியது, `தனித்திரு விழித்திரு' என்ற வள்ளலாரின் வார்த்தைகளைத்தான்.

`சுய ஊரடங்கை மேற்கொள்வோம்' என்ற பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளை ஏற்று, சாதி, மதம், மொழி, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் கடைப்பிடித்தது நம்பிக்கையளிக்கும் செய்தி. ஆனால் இது ஒருநாள் சடங்கல்ல. இன்னும் சில வாரங்களுக்கோ, ஏன், சில மாதங்களுக்கோகூட அனைவரும் இந்த சுய ஊரடங்குக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெரும்பாலான தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது வரவேற்கத்தக்கது. ஆனால் வாகன ஓட்டுநர்கள், வீட்டுப் பணியாளர்கள் போன்ற `வீட்டில் இருந்தே பணிகள்' மேற்கொள்ள முடியாத அமைப்புசாராத் தொழிலாளர்கள், தினக்கூலிப்பணியாளர்கள் குறித்தும் நாம் யோசிக்க வேண்டிய தருணமிது. கனடா அரசு, பணியாளர்கள் அனைவருக்கும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை 900 டாலர்கள் என்று அடுத்த 15 வாரங்களுக்கு தரவிருக்கிறது. சிங்கப்பூர் அரசு குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு அன்றாடம் 100 டாலர் உதவித்தொகை அளிக்கிறது. இந்தியாவிலேயே கேரள அரசு ஏழை மக்களுக்கான உதவித்தொகைக்கும் ரேஷன் பொருள்களுக்கும் 20,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதேபோல டெல்லியிலும் சுமார் 8.5 லட்சம் பேருக்கு ரூபாய் 4,000 முதல் 5,000 உதவித்தொகையும், 72 லட்சம் பேருக்கு ஐம்பது சதவிகிதம் கூடுதல் ரேஷன் பொருள்களும், சமுதாய நல விடுதிகளில் இரவு தங்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவும் கொடுக்கவிருப்பதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாடு முழுவதும் அடித்தட்டு மக்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்போருக்கான உதவித்தொகை, கூடுதல் ரேஷன் பொருள்கள் வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதைச் செயல்படுத்துவதற்காக மாநிலங்களுக்குக் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். இப்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இது அரசுக்குச் சவாலான காரியம்தான். ஆனால் ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அடித்தட்டு மக்கள், இந்த ஊரடங்கு நடவடிக்கையால் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அரசு மட்டுமே தனித்து இதைச் செய்ய இயலாது. பெரும் பணக்காரர்கள், தனியார் நிறுவனங்கள், மத நிறுவனங்கள் தொடங்கி தனிநபர்கள் வரை இதற்கு நிதியளிக்க முன்வரவேண்டும். நம் சகோதரர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்துகொண்டே, கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தைத் தொடர்வோம்.

எப்போதுமே இந்தியர்களாகிய நாம் இணைந்தே பல இன்னல்களை எதிர்கொண்டிருக்கிறோம். இப்போது இதயங்களால் இணைந்தும் இருப்பிடங்களில் தனித்தும் எதிர்கொள்ள வேண்டிய இந்தச் சவாலையும் வென்று இந்தியாவைக் காப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism