Published:Updated:

ஆசிரியர் பக்கம்

அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே!

ஆசிரியர் பக்கம்

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே!

Published:Updated:
அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
அன்பு வணக்கம்!
"நியூட்டன் சொன்ன விதி பொய்யாய்ப் போனதடி... காதல் வந்ததுமே கால்கள் காற்றாய் மிதக்குதடி" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. காரணம் பெளதீக விதிகளை மனித உணர்வுகள் மாற்றுவதைப்போல.. பொருளாதார விதிகளை, கார் மற்றும் பைக் வாடிக்கையாளர்கள் மாற்றி வருகிறார்கள்.

பெட்ரோல் விலை நூறு ரூபாயை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் கொரோனாவும் லாக்டெளன் வதந்திகளும் கைகோத்துக் கொண்டு மக்களின் வாழ்க்கையில் சடுகுடு விளையாடிக் கொண்டிருக்கின்றன. இது எல்லாவற்றுக்கும் மேலாக செமி கண்டக்டர்கள் தட்டுப்பாடு கார்களின் உற்பத்திக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்திருக்கிறது. அதனால் ஒரு சில கார்களின் காத்திருப்பு காலம் என்பது மூன்று மாதம், நான்கு மாதம் என்று நீள்கின்றது. ஆனால் இவை அனைத்தையும் மீறி கார் வாடிக்கையாளர்களின் ஆர்வம், இந்தத் துறையை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. ஸ்கோடாவின் குஷாக், ஃபோக்ஸ்வாகனின் டிகுவான் மற்றும் டைகூன், டொயோட்டாவின் லெஜெண்டர், ஆகிய வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து வருவதைப் பார்க்க முடிகிறது.

கார் மற்றும் மார்க்கெட்டைப்போலவே, நமக்கு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் கொடுத்த இன்னொரு விஷயம், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஹோண்டா டேலன்ட் ஹன்ட். நம்மூர்த் தொலைக்காட்சிகளின் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால்... `நம் நாட்டின் செல்ல ரேஸரைத் தேடி...’ அல்லது, `அடுத்த நரேன் கார்த்திகேயன் யார்?’ என்று போட்டியைப் புரிந்து கொள்ளலாம். பைக் ரேஸ் அல்லது கார் ரேஸில் இருக்கும் அப்பாக்களைப் பார்த்து மழலைகூட மாறாத பல மகன்கள் இந்தப் போட்டிக்கு வந்ததைப் பார்க்க முடிந்தது. இன்னொருபுறம் நிலையான வருமானமில்லாத, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் இருக்கும் குடும்பத்தில் இருந்தும் பலர் இந்தப் போட்டிக்கு வந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது. இதில் ஒரு தம்பதியினர், தன் மகளை இந்தப் போட்டிக்கு அழைத்து வந்திருந்தார்கள். இவர்கள் எல்லோரிடமும் பேசியதில் ஒரு விஷயம் புரிந்தது. தங்களின் பிள்ளைகளின் ஆட்டோமொபைல் ஆர்வத்துக்கு எந்த ஒரு பெற்றோருமே குறுக்கே நிற்கவில்லை.

ரேஸிங் துறையில் இருக்கும் சவால்களை எல்லாம் பல கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டாலும், அவர்கள் விருப்பத்துக்கு உறுதுணையாக அவர்கள் நின்றதைப் பார்க்க முடிந்தது. இந்தப் பெற்றோர்களுக்கு நம் சல்யூட்!

அன்புடன்
ஆசிரியர்