பிரீமியம் ஸ்டோரி
ரு மாத இதழை வாசகர்கள் எந்தெந்தத் தளங்களுக்கும் எல்லைகளுக்கும் கொண்டு போக முடியும் என்பதற்கு மோட்டார் விகடனின் பயிலரங்கங்களே சாட்சி! கார் அல்லது பைக்கின் வெளிப்புற அழகு, தரம், அளிக்கப்பட்டிருக்கும் வசதிகள், நவீன அம்சங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், மாற்றாக இருக்கும் போட்டியாளர்கள், அவற்றுக்கு இடையேயான ஒப்பீடு, காஸ்ட் ஆஃப் ஓனிங், ரீசேல் மதிப்பு... ஆகியவற்றைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அலசும் வாசகர்கள் ஒருபுறம் என்றால்... காரில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மட்டுமல்லாது... அது எப்படிப்பட்ட தொழில்நுட்பத்தோடு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அலசும் ஆற்றலும் நம் வாசகர்களுக்கு வெகுவாக இருப்பதால், அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில்... கார் மற்றும் பைக் உற்பத்தியைத் தலைமை ஏற்று நடத்தும் பொறுப்புமிக்க பதவிகளில் இருக்கும் தொழில்நுட்பம் தெரிந்த வல்லுனர்களை அழைத்து வந்து மோட்டார் விகடன் தொடர்ந்து பயிலரங்கங்கள் நடத்தி வருகிறது.

கார், பைக் ஆகியவற்றை ஓட்டுவது மட்டுமல்ல; உருவாக்குவதும் ஒரு மாபெரும் கலைதான் என்பதால்... ஆட்டோமொபைலுக்கும் மாநிலம், மொழி, பூகோள எல்லைகள் என எதுவும் கிடையாது. மோட்டார் விகடன் நடத்தும் பயிலரங்கங்களில் சிற்றூர் மற்றும் கிராமங்களில் இருந்து கலந்து கொள்ளும் பார்வையாளர்களும் உண்டு. மேலைநாடுகளில் இருந்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பங்கேற்பாளர்களும் உண்டு. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், மஹிந்திரா அண்டு மஹிந்திராவோடு இணைந்து Automotive R & D Design என்ற தலைப்பில் மோட்டார் விகடன் நடத்தி வரும் ஐந்து நாள் பயிலரங்கில் கலந்து கொள்ள இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோமொபைல் ஆர்வலர்களும் மாணவர்களும் பதிவு செய்திருக்கிறார்கள் என்றால்... அதற்கு முழு முதற்காரணம்... இந்தப் பயிலரங்கங்களின் செறிவான உள்ளடக்கம் மற்றும் அறிவுப் பரிமாற்றம் பற்றி வாசகர்களாகிய நீங்கள், உங்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கு இதை எடுத்துச் சொன்னதுதான்.

இந்தப் பயிலரங்கங்களைக் கவனிக்கத் தவறிய ஒரு சிலர்... ‘பல்லாயிரம் பேர்களைக் கவர்ந்திழுக்கும் அளவுக்கு இந்தப் பயிலரங்கில் அப்படி என்ன இருக்கின்றன?’ என்று கேட்கக் கூடும் என்பதால், அடுத்து வரும் பக்கங்களில் இந்தக் கேள்விக்கான விடையைக் கொடுத்திருக்கிறோம்.

ஐந்து நாட்கள் அல்ல; ஆயுள் முழுதுமே ஆட்டோமொபைல் அறிவியலில் திளைக்க அதில் அத்தனை அற்புதமான விஷயங்கள் உள்ளன. உங்களில் யாராவது இந்தப் பயிலரங்கத்தைத் தவற விட்டிருந்தால்... இனியும் இந்த அற்புதமான வாய்ப்பைத் தவறவிட வேண்டாம். உடனடியாகப் பதிவு செய்து பயிலரங்கில் பங்கேற்கவும்.

அன்புடன்

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு