Published:Updated:

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

Published:Updated:
அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
அன்பு வணக்கம்!
மோட்டார் விகடன் நடத்தும் பயிலரங்கங்களுக்கு நீங்கள் கொடுக்கும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைப் பார்க்கும்போது...

வேலை வாய்ப்புகளைத் தரக் கூடிய துறைகளைச் சேர்ந்த, விஷயம் தெரிந்த நிபுணர்களைக் கொண்டு, மேலும் பல பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகிறது. கார் டிசைன், பைக் டிசைன், மோட்டார் ஸ்போர்ட்ஸ் என்பதைத் தாண்டி... மென்பொருள் துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகளைப் பற்றியும், கடந்த மாதம் நாம் நடத்திய பயிலரங்கத்தில் வெளிப்பட்ட கருத்துகளைப் பாராட்டி அதில் பங்கேற்ற பலரும் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில், இந்தப் பயிலரங்கில் சொல்லப்பட்ட கருத்துக்கள் அத்தனையும், அதில் பங்கெடுத்தவர்களுக்கு அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கும், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.

`ஐடி துறையில் வேலை வாய்ப்புகள்’ என்பதுதான் தலைப்பு. ஆனால், உள்ளூர்ப் பொருளாதாரம் துவங்கி, உலகப் பொருளாதாரம் வரை இதில் பங்கெடுத்த அனைவருக்கும் ஒரு பருந்துப் பார்வை கிடைத்தது. காரணம், இந்தப் பயிலரங்கத்தை நடத்தியவர்கள் ஆட்டோமொபைல், ஏவியேஷன், டெலிகாம், ரீடெய்ல், லாஜிஸ்டிக்ஸ், பேங்கிங், இன்ஷூரன்ஸ் என்று சகல துறைகளின் முன்னணி நிறுவனங்களுக்கும் மென்பொருளை உருவாக்கித் தரும் டெக் மஹிந்திராவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள். பன்னாட்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளோடு பணியாற்றுகிறவர்கள். காற்று எந்தத் துறையின் பக்கம் வீசுகிறது... நிதி எந்தத் திசையை நோக்கி நகர்கிறது என்பதை அறிந்தவர்கள். இந்தப் பயிலரங்கத்தைப் பார்க்க இயலாதவர்கள், அடுத்து வரும் பக்கங்களில் இருக்கும் QR Code -ஐ ஸ்கேன் செய்து அதைப் பார்ப்பது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

மோட்டார் விகடனைப் பொறுத்தவரை சென்ற மாதத்தின் ஸ்டார், மஹிந்திராதான். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், மஹிந்திரா தார். இந்தியாவில் எந்த ஒரு பத்திரிகைக்கும் கிடைக்காத வாய்ப்பை மஹிந்திரா மோட்டார் விகடனுக்கு அளித்தது. தாரின் பெட்ரோல், டீசல், மேனுவல், ஆட்டோமேட்டிக், ஹார்டு டாப், கன்வெர்ட்டபிள் என்று அனைத்து வேரியன்ட்டுகளையும் ஆஃப் ரோடில் டெஸ்ட் டிரைவுக்குக் கொடுத்ததோடு, அதை நமது வாசகர்கள் இரண்டு பேருக்கும் ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பையும் வழங்கியது. வாசகர்கள் அவர்களிடம் கேட்ட பல கேள்விகளுக்கு விளக்கமாகப் பதிலளித்ததோடு, ஒட்டுமொத்த மஹிந்திரா ரிஸர்ச் வேலியின் குழுவும் அவர்களோடு ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுவதையும் செலவிட்டது. அந்த அனுபவத்தை நீங்களும் அடைய வேண்டும் என்ற நோக்கில், அதன் QR Code-ம் இது தொடர்பான கட்டுரையில் இடம் பெற்றிருக்கிறது.

இந்த ஆண்டின் சிறந்த கார், பைக் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க, அடுத்த இதழில், ஒரு வாக்குச் சீட்டு கொடுக்கப்படும். அதனால், உங்கள் வாக்கைச் செலுத்த இப்போதே தயாராகுங்கள்.

அன்புடன்

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism