சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து நெஞ்சம் பதறச் செய்கிறது. 19 பேர் கொடூரமாக இறந்துள்ளார்கள். 35 பேர் படுகாயமடைந்து சிகிச்சையில் இருக்கிறார்கள். கல்விக்கட்டணம் கட்டுவதற்காக வேலைக்கு வந்த ஒரு கல்லூரி மாணவியும், பிரசவத்துக்குப் பணம் சேர்க்க வந்த ஏழுமாதக் கர்ப்பிணியும் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். அந்தக் காயத்தின் வடு ஆறுவதற்குள் மறுநாளே காக்கிவாடன்பட்டி என்ற ஊரில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் விபத்து ஏற்பட்டு ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் லட்சக்கணக்கானோர் இந்தத் தொழிலை நம்பியிருக்கிறார்கள். ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய் அளவுக்கு இங்கு வணிகப்பரிவர்த்தனை நடக்கிறது. இவ்வளவு பெரிய வணிக வாய்ப்புள்ள இந்தத் தொழிலில் வேலை செய்பவர்களுக்கு எந்த அளவுக்குப் பாதுகாப்பு இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. 2000 முதல் 2020 வரையிலான 20 ஆண்டுகளில் இங்கு 336 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 482 பேர் பலியாகியுள்ளனர். 361 பேர் காயமடைந்துள்ளனர். பல தொழிற்சாலைகளில் உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தொழிற்சாலையைக் குத்தகைக்கு விடும் வழக்கமும் இருக்கிறது. தற்போது விபத்து நடந்துள்ள ஆலையை 4 பேருக்குக் குத்தகைக்கு விட்டுள்ளார் அதன் உரிமையாளர். ஒரு அறைக்கு 2 முதல் 4 பேர் வரை மட்டுமே அமர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற விதிமுறையைப் பெரும்பாலானோர் மதிப்பதில்லை. பத்துக்கும் மேற்பட்டோர் ஒரே அறையில் அமர்ந்து வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதாகத் தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

20 ஆண்டுகளுக்கு முன்புவரை இங்கு சாதாரண ரகப் பட்டாசுகளே தயாரிக்கப்பட்டு வந்தன. சீனாவிலிருந்து ஃபேன்ஸி ரகப் பட்டாசுகள் அறிமுகமான பிறகே விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இந்தப் பட்டாசுகளில் வானில் சென்று வெடிப்பதற்கான உந்துதலுக்காக ஆபத்தான வெடிமருந்தும் தடை செய்யப்பட்ட வேறுசில ரசாயனப் பொருள்களும் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. மிகவும் அபாயகரமான இந்தப் பொருள்களைக் கையாளும் அளவுக்கு தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. பாதுகாப்பு அதிகாரிகளும் போதிய அளவுக்கு நியமிக்கப்படுவதில்லை. அதனாலேயே விபத்துகள் தொடர்வதாகச் சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள். மேலும் இந்தப் பகுதிகளில் உரிமம் இல்லாமல் குடிசைத் தொழில்போல வீடுகளில் வைத்துப் பல தொழிற்சாலைகள் இயங்குவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

பட்டாசுக் காகிதங்களில் தொழிலாளர்களின் ரத்தம் படிந்திருப்பது தேசத்துக்கு அவமானம். விபத்து ஏற்படும்போது மட்டும் கவலையுடன் பேசி நிவாரணம் அளிப்பது தீர்வல்ல. உரிய பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று தொடர்ந்து கண்காணிப்பதும் அவற்றைக் கடைப்பிடிக்காத தொழிற்சாலைகள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதுமே இந்தத் துயரங்களுக்கான முற்றுப்புள்ளி.