Published:Updated:

காந்தி கண்ட இந்தியாவைக் காப்போம்!

மகாத்மா காந்தி
பிரீமியம் ஸ்டோரி
மகாத்மா காந்தி

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் நிறைவுவிழாவைக் கொண்டாடியிருக்கிறோம்.

காந்தி கண்ட இந்தியாவைக் காப்போம்!

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் நிறைவுவிழாவைக் கொண்டாடியிருக்கிறோம்.

Published:Updated:
மகாத்மா காந்தி
பிரீமியம் ஸ்டோரி
மகாத்மா காந்தி

தச்சார்பற்ற இந்தியாவை உருவாக்குவதற்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்தவர் காந்தி. மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் அமைந்ததைப்போல் இந்தியாவும் மதச்சார்புள்ள நாடாக உருவாகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தனிப்பட்ட முறையில் மதநம்பிக்கை கொண்டிருந்தாலும் அரசியலிலும் அரசாங்கத்திலும் மதம் கலக்கவே கூடாது என்பது காந்தியடிகளின் நிலைப்பாடு. தன் பிரார்த்தனைகளில் ‘ஈஸ்வர அல்லா தேரே நாம்’ என்று எல்லாக் கடவுள்களுக்கும் இடமளித்தவர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சூழலில் மத்திய அரசின் பரிந்துரைப்படி, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ), ‘பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தத்துவப்பாடமாக பகவத்கீதை பயிற்றுவிக்கப்படும்’ என்று கட்டாயப்படுத்தியிருப்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. ‘இது மதச்சார்பின்மை தத்துவத்துக்கு எதிரானது’ என்று இந்திய அளவில் வாதபிரதிவாதங்கள் கிளம்பிக் கிடக்கும் சூழலில், ‘பகவத்கீதை கட்டாயப்பாடமாக இருக்காது. விருப்பப்பாடமாக மாற்றப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார், சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா. ஆனால், பல்வேறு காரணங்களைக் காட்டி, இதைக் ‘கட்டாய விருப்பப்பாடம்’ என்பதாக மாற்றிவிடுவார்களே தவிர, வேறு எந்த மாற்றமும் இருக்காது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர் உள்விவரம் அறிந்த முன்னாள் மாணவர்கள்.

நிற்க... அறநெறிகள், தத்துவம் போன்றவற்றைப் பயில்வது பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் தேவையான ஒன்றுதான். அதற்காகத்தான் ஒருகாலத்தில் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் இருந்தன. திருக்குறள், ஆத்திசூடி, நாலடியார் போன்ற மதச்சார்பற்ற நீதி இலக்கியங்கள் கற்றுத்தரப்பட்டன. ஒருபோதும் மதம்சார்ந்த பாடங்கள் கற்றுத்தரப்படவில்லை.

மதநூல்களைப் படிப்பதும் ஏற்றுக்கொள்வதும் விமர்சிப்பதும் நிராகரிப்பதும் தனிநபர் விருப்பங்கள் சார்ந்தவை. ஒரு மதம் சார்ந்த நூலை எக்காரணம் கொண்டும் பாடத்திட்டத்தில் வைக்கக்கூடாது. மதச்சார்பற்ற இந்த அரசின் நடவடிக்கைகளிலிருந்து மதம் விலக்கி வைக்கப்பட வேண்டும். அதேபோல்தான் கல்வியிடமிருந்தும் விலக்கி வைக்கப்பட்டே ஆகவேண்டும். அதுதான் மதச்சார்பின்மை தத்துவத்துக்கு பலம் சேர்க்கும்.

காந்தி பிறந்தநாளைக் கொண்டாடுவது, அந்த நாளில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவிப்பது, காந்தியைத் தன் முன்னோடியாக முன்மொழிவது, வெளிநாடுகளில் காந்தியின் புகழ்பாடுவது ஆகியவற்றைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இன்னொருபுறம், அவருடைய மனிதவள மேம்பாட்டுத்துறையே காந்தியின் கொள்கைகளுக்கு விரோதமாகக் கல்வியில் மதத்தைத் திணிப்பது எப்படி சரியாகும்?

காந்தியின் அடையாளம் கண்ணாடியோ, தடியோ, மெலிந்த உருவமோ மட்டுமல்ல. நல்லிணக்கக் கொள்கைகளே காந்தியின் அடையாளம். அதைப் பேணிக்காக்கும் கடமை, நாட்டின் மீது அக்கறை கொண்ட மக்களிடம் மட்டும் இருந்தால் போதாது... மக்களை ஆளும் அரசிடமும் இருக்கவேண்டும்!