Published:Updated:

கருத்துச்சுதந்திரம் காக்கக் கைகோப்போம்!

கருத்துச்சுதந்திரம் காக்கக் கைகோப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
கருத்துச்சுதந்திரம் காக்கக் கைகோப்போம்!

“உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், உங்கள் கருத்தைச் சொல்லும் உரிமையை நான் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்”

கருத்துச்சுதந்திரம் காக்கக் கைகோப்போம்!

“உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், உங்கள் கருத்தைச் சொல்லும் உரிமையை நான் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்”

Published:Updated:
கருத்துச்சுதந்திரம் காக்கக் கைகோப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
கருத்துச்சுதந்திரம் காக்கக் கைகோப்போம்!
சிறுபான்மையினருக்கும் பட்டியலினத்தவருக்கும் எதிரான வன்முறையைத் தடுத்து நிறுத்துமாறு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியதற்காக இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது பீகாரைச் சேர்ந்த சுதிர்குமார் ஓஜா என்பவர் தொடர்ந்த வழக்கில் அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதியுமாறு பீகார் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. கருத்துச்சுதந்திரத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையைக் கண்டித்து ஆனந்த விகடன் தலையங்கமும் அட்டைப்படக்கட்டுரையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (09.10.2019) வழக்கை முடிப்பதாக பீகார் காவல்நிலையம் முடிவு செய்துள்ளதாக வந்திருக்கும் தகவல் மகிழ்ச்சியளிக்கிறது. கருத்துச்சுதந்திரத்தைக் காப்பதில் ஆனந்த விகடன் எப்போதும் தொடர்ந்து உறுதியுடன் இருக்கும்.

“உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், உங்கள் கருத்தைச் சொல்லும் உரிமையை நான் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்”

- வரலாற்றில் நிலைபெற்றுவிட்ட வால்டேரின் வரிகள் இவை. கருத்துச்சுதந்திரத்துக்கான அடிப்படையாக உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல் இது. ஆனால், கருத்துச்சுதந்திரத்தின் இந்த அடிப்படை மதிப்பீடு கேள்விக்குள்ளாகும் சூழல்தான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்தியாவின் முக்கியமான வரலாற்றாசிரியர்கள் ராமச்சந்திர குஹா, ஆசிஷ் நந்தி, இந்திய சினிமாவின் முக்கியமான படைப்பாளிகளான ஷியாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், கொங்கனா சென், ரேவதி உள்ளிட்ட 49 பேர்மீது தேசத்துரோக வழக்கு பதிய உத்தரவிட்டிருக்கிறது பீகார் நீதிமன்றம். அப்படி என்ன குற்றம் செய்தார்கள் இவர்கள்? ‘நாட்டில் கும்பல் கொலைகள் அதிகரித்துவிட்டன. சிறுபான்மையினருக்கும் பட்டியலினத்தவருக்கும் எதிரான வன்முறையைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பு உங்களுக்கு உண்டு’ என்று அவர்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியதுதான் குற்றமாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் கடிதம் இந்தியாவின் நன்மதிப்பைக் குலைப்பதாக சுதிர்குமார் ஓஜா என்பவர் வழக்கு தொடர்ந்ததை முன்னிட்டு, தேசத்துரோக வழக்கு பதிய உத்தரவிட்டிருக்கிறது பீகார் நீதிமன்றம். ஒரு சாமானிய குடிமகன் அரசோ அதிகார வர்க்கமோ தன்னை அச்சுறுத்துவதாக நினைத்தாலோ, தன் கருத்துரிமை பறிக்கப்படுவதாகக் கருதினாலோ, நாடுவது நீதிமன்றத்தைத்தான்.கருத்துரிமையை உறுதி செய்யவேண்டிய நீதிமன்றமே, கருத்துரிமையைப் பறிக்கும் வகையில் வழக்குப் பதிவு செய்ய அனுமதித்திருப்பது, அரசியல் சட்டத்துக்கே எதிரானது.

பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவை அரசியல் சட்டம் இந்திய மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள். இந்த அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது நீதிமன்றத்தின் நடவடிக்கை. இத்தனைக்கும் 49 பேரும் தங்கள் கருத்துகளை முன்வைக்க, சட்டத்துக்கு அப்பாலான வழிமுறைகளைக் கையாளவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்குக் கடிதம் எழுதுவது என்ற ஜனநாயக வழிமுறைக்காக தேசத்துரோக வழக்கு என்றால், அது ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்த்துவிடும். நீதிமன்றம் தன் உத்தரவைத் திரும்பப் பெறுவதுதான் ஜனநாயகத்தின் மாண்புக்கு வலுச்சேர்க்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரதமர் மோடிக்கும் இந்த நடவடிக்கைக்கும் நேரடித் தொடர்பில்லை என்றாலும், தனக்கு எழுதப்பட்ட கடிதத்திற்காகத்தான் இந்த நடவடிக்கை என்பதால், இதுகுறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் பிரதமருக்கு உண்டு. இந்த 49 பேரும் எதிர்க்கட்சியினரோ தனிப்பட்ட விரோதம் கொண்டவர்களோ அல்லர். கலை, இலக்கியம், ஆய்வுத்துறைகளின் முக்கியமான ஆளுமைகள். வெவ்வேறு துறைகளில் இந்தியாவின் முகமாக விளங்குபவர்கள். இவர்களின் கடிதத்தில் உள்ள விமர்சனங்களுக்கு பிரதமர் தகுந்த பதில் அளித்திருக்க வேண்டும். குற்றச்சாட்டுகளில் நியாயம் இல்லை என்றால் தகுந்த ஆதாரங்களுடன் மறுத்திருக்க வேண்டும். ‘மன் கி பாத்’ என்று மக்களோடு உரையாடக்கூடிய மோடி, ஒரு சிறுமியின் கடிதத்துக்கே பதில் அளிக்கும் மோடி, இரண்டாவது முறையாகப் பதவியேற்றதும் ‘எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துப் பாடுபடுவேன்’ என்று உறுதியளித்த மோடி, இப்போதாவது வாய் திறந்து தன் கருத்தை முன்வைக்க வேண்டும். தனக்கு உடன்பாடில்லாத, உவப்பில்லாத கருத்தாக இருந்தாலும் அதன் சுதந்திரத்துக்காகக் குரல்கொடுக்க முன்வர வேண்டும்.

கருத்துச்சுதந்திரத்தையும் இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும் நேசிப்பவர்கள் அனைவரும் 49 பேரின் கருத்துரிமைக்கு ஆதரவாக நிற்போம் என்று உறுதியேற்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism