வரலாறு திரும்பியிருக்கிறது... 63 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு சீன அதிபர் ஒருவர் தமிழகம் வந்திருக்கிறார்.தமிழர்களின் விருந்தோம்பலுக்கு ஈடு இணையே இல்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் சீன அதிபர் ஜி ஜின்பிங், வெகுசிறப்பான வரவேற்பு மழையில் நனைந்து திக்குமுக்காடியிருக்கிறார்!

1956-ம் ஆண்டில் சீன அதிபராக இருந்த சூ என்லாய் இங்கே வந்தபோதும் மாமல்லபுரத்தைப் பார்வையிட்டு வியந்தார். கூடவே, பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை முதல் சினிமாத் தயாரிப்புக்குப் புகழ்பெற்ற ஜெமினி ஸ்டூடியோ வரை பார்த்துப் பாராட்டிச் சென்றார்.

இது 63 ஆண்டுக்கால வரலாறு. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானது தமிழகத்துக்கும் சீனாவுக்கும் இடையேயான பந்தம். போதிதர்மர் பற்றிய செய்திகளும், சீனப்பயணி யுவான் சுவாங்கின் குறிப்புகளும் சொல்வது அதைத்தான். அண்மையில், தென்கிழக்குச் சீனாவின் குவான் ஸோ நகரில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டுக் கல்வெட்டு கிடைத்திருப்பது இதற்குக் கூடுதல் சான்று!

நேற்றைய சீனிப்பட்டாசு (சீனப்பட்டாசு) தொடங்கி, இன்று வீதிதோறும் கிடைக்கும் செல்போன்கள் வரை சீனத் தயாரிப்புகளுடனான நம் உறவு கூடுதல் நெருக்கம் கொண்டதே. இந்திய அளவில், ஆண்டுக்கு ஏழு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகப் பரிவர்த்தனை நடப்பதிலிருந்தே இருநாட்டுத் தொடர்பின் ஆழத்தை உணரமுடியும்.

சரித்திரம், சாப்பாடு, வர்த்தகம் ஆகிய அனைத்துத் தொடர்புகளையும் கடந்து, எதிர்காலத்திட்டங்கள் என்று பார்த்தாலும் சீனாவுக்கும் துறைமுக நகரமான சென்னையைத் தலைநகராகக் கொண்டு விளங்கும் தமிழகத்துக்கும் பலமான வாய்ப்புகள் பிரகாசமாகவே தெரிகின்றன.

இந்திய அளவில் பல நகரங்கள் இருந்தாலும் மோடி - ஜின்பிங் சந்திப்புக்குச் சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, உலகளவில் சென்னையின் முக்கியத்துவத்தை உயர்த்தும்.இவற்றுக்கு நடுவே, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான ராஜ்யரீதியிலான நட்புறவு எப்படிச் செல்லப்போகிறது என்பதை உலகமே உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது.

சென்னைக்கு வருவதற்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகச் சீனாவில் வைத்து விவாதித்தார் ஜின்பிங். பிறகு, காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்துகளை சொல்லிவிட்டுத்தான் இங்கே பறந்து வந்தார். இந்த விஷயத்தை உலகமே நெருடலாகத்தான் பார்த்தது.

ஆனால், 'நம்மிடையே இருக்கும் வேற்றுமைகள், பிரச்னைகளாக மாறிவிடாமல் நாம் இருவருமே சாதூர்யத்துடன் கையாள்வோம். இருவருமே அடுத்தவர் தரப்பு அக்கறை செலுத்தும் விஷயங்களை ஜாக்கிரதையாக அணுகுவதன் மூலம் உலகின் நிலைத்தன்மை மற்றும் அமைதிக்கு வழிவகுப்போம்' என்று இந்த விஷயத்தையும் ஆக்கப்பூர்வமான வகையில் கோடிட்டுக் காட்டி, சீனப்பிரதமரைக் யோசிக்க வைத்திருக்கிறார் மோடி!

ஒரு நாட்டுக்கு, பக்கத்து நாட்டின் நட்பு, அதனருகிலிருக்கும் நாடுகளின் நட்பு, பலமான நாடுகளின் நட்பு இவை அனைத்துமே முக்கியம் என்பதுதான் வெளியுறவுக்கொள்கையின் அடிப்படை. சீனா பக்கத்து நாடு மட்டுமல்ல. பலமான நாடும்கூட. இந்தியாவின் நட்புப் பட்டியல் நீளட்டும்!