Published:Updated:

வரவேற்போம்!

பசுமை விகடன்
பிரீமியம் ஸ்டோரி
பசுமை விகடன்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

வரவேற்போம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

Published:Updated:
பசுமை விகடன்
பிரீமியம் ஸ்டோரி
பசுமை விகடன்

‘தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் தப்பியது’போல அண்மையில் ஒரு நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 10 ஆசியான் கூட்டமைப்பு நாடுகளும் சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 6 நாடுகளும் சேர்ந்த 16 நாடுகளைக் கொண்ட கூட்டமைப்புதான் `ஆர்செப்’ (The Regional Comprehensive Economic Partnership-RCEP). இந்த ஆர்செப்பிலுள்ள நாடுகள், கடந்த நவம்பர் 4-ம் தேதி, தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் பன்னாட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடத் திட்டமிட்டன. இதற்கு நம் நாடு முழுவதிலுமிருந்தும் பல்வேறு துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

காரணம், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு இந்தியச் சந்தை மீது எப்போதுமே ஒரு கண் இருக்கிறது. அதற்கு இந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டமிட்டன. இதில் நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் எப்படியாவது இந்தியாவுக்குள் நுழைந்து, தங்களது பால் மற்றும் பால் பொருள்களை விற்பனை செய்ய ஒற்றைக்காலில் நின்றன. இந்த இரண்டு நாடுகளும் பால் விற்பனை செய்யச் சென்ற நாடுகளில் இப்போது அங்கிருக்கும் மக்களின் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

ஆரம்பத்தில் சல்லிசான விலைக்குப் பொருள்களை விற்பனை செய்து, உள்ளூர் உற்பத்தியாளர்களை ஓரம்கட்டிவிட்டு, ஒட்டுமொத்தச் சந்தையையும் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார தந்திரம். நல்லவேளை, இந்தப் பன்னாட்டு பகாசுர சக்திகளிடமிருந்து நாம் தப்பித்துவிட்டோம்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் சென்ற பிரதமர் நரேந்திரமோடி, ‘‘இந்தியாவின் விவசாயிகள், தொழில் துறையினர் என எல்லோரையும் இந்த ஒப்பந்தம் பாதிக்கலாம். அண்ணல் காந்தியின் வழிகாட்டுதலும், என் மனசாட்சியும் இந்த ஒப்பந்தத்தில் இணைவதைத் தடுக்கின்றன’’ எனக் கடைசி நேரத்தில் அறிவித்து, நம் அனைவர் வயிற்றிலும் பால் வார்த்திருக்கிறார். இந்த நிலைப்பாட்டில் அவர் என்றும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். நாட்டுநலனில் அக்கறைகொண்டு நல்ல முடிவெடுத்த பிரதமரை வரவேற்போம்; வாழ்த்துவோம்!

-ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism