Published:Updated:

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

Published:Updated:
அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
அன்பு வணக்கம்!

‘`கார்/பைக் தேவைகள் எல்லாம், மிகப் பெரிய தேக்கநிலையை அடைந்துவிட்டன. விற்பனையில் கணிசமான சரிவு ஏற்பட்டுவிட்டது’’ - இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே, இதுபோன்ற செய்திகள்தான் தலைப்புச் செய்திகளாக வந்துகொண்டிருந்தன; வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சிறந்த கார் - பைக் - ஸ்கூட்டர் தேர்வுக்கான வேலைகளை ஆரம்பித்தபோது, `அடேங்கப்பா... இந்த ஆண்டு இத்தனை கார் மற்றும் டூ-வீலர்களா வந்திருக்கு’ என்ற ஆச்சர்யம் ஏற்பட்டது. புதிய கார்கள் மட்டுமல்ல; புதிய கார் கம்பெனிகளான கியா மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் ஆகியவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இது ‘பையர்ஸ் மார்க்கெட்’ என்று சொல்லப்பட்டாலும், கியா செல்ட்டோஸ் மற்றும் எம்ஜி ஹெக்டர் போன்ற கார்களை புக் செய்துவிட்டு, டெலிவரிக்காகப் பல மாதங்கள் காத்திருக்கும் விநோதமான காட்சியும் இந்தக் காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பைக்குகளை எடுத்துக் கொண்டால், உள்நாட்டு உதிரிபாகங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கும் பெனெல்லி இம்பீரியல் 400, பவர்ஃபுல் கேடிஎம் டியூக் 790, 250சிசி செக்மென்ட்டுக்குத் தாமதமாக வந்தாலும் அப்-டு-டேட்டாக வந்திருக்கும் சுஸூகி ஜிக்ஸர் 250/SF250 போன்றவை, இந்த ஆண்டுக்கான போட்டியை விறுவிறுப்பாக்கியிருக்கின்றன.

அதேபோல புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்பத் தயாரிக்கப்பட்டிருக்கும் ஹோண்டா ஆக்டிவா 125 BS-6 மற்றும் இதோடு போட்டி போட ஏதுவாக Fi தொழில்நுட்பத்தோடு களம் கண்டிருக்கும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஆகியவை, சிறந்த ஸ்கூட்டர் போட்டிக்குத் தேவைப்படும் உத்வேகத்தைக் கொடுத்திருக்கின்றன.

வெற்றிக் கோப்பையை ஜெயிக்கப்போகும் சிறந்த கார் - பைக் - ஸ்கூட்டர் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க, மோட்டார் விகடன் தேர்வுக் குழுவுக்கு உங்களின் உதவியும் தேவைப்படுகிறது. எனவே அடுத்து வரும் பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் வாக்குச்சீட்டை, அதில் குறிப்பிட்டிருப்பதைப்போல பூர்த்தி செய்து, கட்டாயம் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

அன்புடன்

ஆசிரியர்